போதைப் பொருளுடன் வந்த நடிகரை நான் விரட்டிவிட்டேன்: ஸ்ரீரெட்டி
Recommended Video

சென்னை: நடிகை ஸ்ரீரெட்டி தெலுங்கு நடிகர் நானி மீது பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ராணா அவரின் தம்பி அபிராமின் புகைப்படங்களை ஃபேஸ்புக்கில் வெளியிட்டு சர்ச்சையை கிளப்பினார் ஸ்ரீரெட்டி. இந்நிலையில் தெலுங்கு நடிகர் நானி மீது புகார் தெரிவித்துள்ளார்.
நானி குறித்து அவர் கூறியிருப்பதாவது,

நானி
நானிக்கு குடிப்பழக்கம் உள்ளது. பெண்கள் விஷயத்தில் அவர் ரொம்ப மோசம். தெலுங்கு திரையுலகில் ஒரு இடத்தை பிடிக்க நானி போராடிக் கொண்டிருந்தபோது அவருடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது.

மது
நானி புகைப்பிடிப்பார், மது அருந்துவார், போதைப் பொருள் பயன்படுத்துவார். ஒரு நாள் அவர் எனக்கும் போதைப் பொருள் கொடுத்தார். போதை என் கெரியரை நாசமாக்கிவிடும் என்று நான் நானியை எச்சரித்து என் வீட்டில் இருந்து வெளியே செல்லுமாறு கூறினேன்.

படுக்கை
நானி என்னுடன் உறவு வைத்துள்ளார். தன் படங்களில் நடிக்க வாய்ப்பு தருவதாகக் கூறி உறவு கொண்டார். என் கெரியருக்கு உதவும் என்று நினைத்தேன். அவருக்கு அப்பொழுது திருமணம் ஆகவில்லை.

உண்மை
நானியின் மனைவி எதற்காக தனத்து சம்பந்தமே இல்லாத விஷயத்தில் தலையிடுகிறார் என்று தெரியவில்லை. எனக்கும், நானிக்கும் இடையே இருந்த உறவு பற்றி தெரியாமல் அவர் எதற்கு பேசுகிறார்? நான் தன் மனைவியிடம் உண்மையை கூறுவாரா? என்று கேள்வி எழுப்பியுள்ளார் ஸ்ரீரெட்டி.


Click it and Unblock the Notifications











