விஷால் கூப்பிட்டால் முயற்சி செய்வேன்.. அவர்தான் சாகுற நிலைமைக்கு போனாரே.. ஸ்ரீரெட்டி ஓபன் டாக்
சென்னை: நடிகை ஸ்ரீரெட்டி தமிழ் சினிமாவை சேர்ந்த விஷால், ஏ.ஆர்.முருகதாஸ், ராகவா லாரன்ஸ் ஆகியோர் மீதெல்லாம் சில வருடங்களுக்கு முன்பு பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்து பரபரப்பை கிளப்பியவர். இப்போது அவர் மீண்டும் தனியார் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்தார். அந்தப் பேட்டியில் விஷால் குறித்து பேசிய அவர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார். அந்தப் பேட்டி ட்ரெண்டும் ஆகியிருக்கிறது.
ஸ்ரீரெட்டியை கோலிவுட்டை சேர்ந்தவர்களும், ரசிகர்களும் அவ்வளவு எளிதாக மறந்துவிடமாட்டார்கள். மீ டூ என்ற ஒன்று வந்தபோது உலகம் முழுவதும் திரையுலகை சேர்ந்த பெண் பிரபலங்கள் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லைகள் குறித்து ஓபனாக போட்டு உடைத்தார்கள். அந்த சமயத்தில் யார் மீதெல்லாம் பெரிய பிம்பம் இருந்ததோ அந்த பிம்பங்கள் எல்லாம் சுக்கு நூறாக உடைந்துவிட்டன.
ஸ்ரீரெட்டியின் புயல்: தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகை பொறுத்தவரை ஸ்ரீரெட்டி பெரிய புயலை உண்டு செய்தார். டோலிவுட்டில் பவன் கல்யாண் உள்ளிட்டோர் மீது புகாரை வைத்து பரபரப்பை கிளப்பிய அவர்; அடுத்ததாக கோலிவுட் பக்கம் வந்தார். இங்கு வந்தவர்; ஏ.ஆர்.முருகதாஸ், ராகவா லாரன்ஸ், விஷால், அர்ஜுன் என பலரையும் விட்டுவைக்கவில்லை. அது அப்போதைக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
விஷால் பற்றி ஸ்ரீரெட்டி: அவர் கோலிவுட்டில் விஷால் மீது வைத்த பாலியல் குற்றச்சாட்டு பெரிய பேசுபொருளானது. அந்த சமயத்தில் விஷாலை அனகோண்டா என்றெல்லாம் ரசிகர்கள் மீம்ஸ் போட்டு கிண்டல் செய்யும் அளவுக்கு நிலைமை சென்றுவிட்டது. ஆனால் விஷாலோ அதுகுறித்தெல்லாம் பெரிய ரெஸ்பான்ஸ் செய்யவில்லை. மறுத்துவிட்டார். அதேசமயம் ஸ்ரீயோ அரை நிர்வாண போராட்டமெல்லாம் நடத்தினார்.
மார்க் ஆண்டனியில்: சூழல் இப்படி இருக்க ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் மார்க் ஆண்டனி படத்தில் நடித்தார். ஸ்ரீரெட்டி கூறியிருந்த அனகோண்டா விஷயத்தை அப்படத்தின் க்ளைமேக்ஸில் ஒரு காட்சியாகவே வைத்துவிட்டார்கள். அந்த சீனுக்கு தியேட்டரில் பெரும் ரெஸ்பான்ஸ் கிடைத்தது. இப்படி ஸ்ரீரெட்டி விஷால் பற்றி சொன்னது அந்த அளவுக்கு அனைவரிடமும் சென்று சேர்ந்திருந்தது.

ஸ்ரீரெட்டி பேட்டி: சில வருடங்களாக அமைதியாக இருந்த அவர் இப்போது தனியார் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்தார். அந்தப் பேட்டியில் அவர், "மார்க் ஆண்டனி படத்தில் நான் சொன்னதை வைத்து சீன் வைத்திருந்தார்கள். அவர் அனைத்தையுமே பப்ளிசிட்டிக்காக செய்வது ஒரு நல்ல விஷயம். அந்த சமயத்தில் சில பத்திரிகையாளர்கள் என்னை தொடர்புகொண்டு விஷாலை பற்றி அப்படி பேசுங்கள், இப்படி பேசுங்கள் என்று சொல்லியதுண்டு.
கூப்பிட்டால் முயற்சி செய்வேன்: ஒருவேளை அவருடன் நடிக்க என்னை அவர் கூப்பிட்டால் செல்வதற்கு முயற்சி செய்வேன். மார்க் ஆண்டனி படத்தில் நடித்தபோது ஏற்பட்ட விபத்தால் அவர் சாகுற நிலைமைக்கு சென்றாரே. அவர் ஒன்று நினைத்தார் கடவுள் ஒன்று நினைத்தார். விஷால் திருமணம் செய்துகொள்ளப்போவதாக அறிவித்திருக்கிறார். அவருக்கும் தன்ஷிகாவுக்கும் வாழ்த்துகள். கணவராக இருப்பது என்பது பெரிய டாஸ்க்" என்றார்.


Click it and Unblock the Notifications











