‘மாலைநேரம் மல்லிப்பூ.. மல்லிப்பூ..’ஸ்ரீரெட்டியால் சந்தானம் படத்திற்கு இப்படி ஒரு சோதனையா?
சந்தானம் படப் பாடலுக்கு ஆக்ஷன் செய்து ஸ்ரீரெட்டி வெளியிட்ட வீடியோ வைரலாகியுள்ளது.
Recommended Video
சென்னை: நடிகை ஸ்ரீரெட்டி சந்தானத்தின் பட பாடலுக்கு ஆக்ஷன் செய்து வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் மீது பாலியல் புகார் கூறி, அரை நிர்வாணப் போராட்டம் நடத்தி பரபரப்பை ஏற்படுத்தியவர் நடிகை ஸ்ரீரெட்டி. தமிழில் ராகவா லாரன்ஸ், முருகதாஸ், ஸ்ரீகாந்த் என பலர் மீது பாலியல் புகார் கூறியுள்ளார். ஆனால், இதுவரை தான் புகார் கூறிய யார் பற்றியும், உரிய ஆதாரங்கள் எதுவும் அவர் வெளியிடவில்லை. இதனால், அவரது புகார்கள் சர்ச்சையைத் தாண்டி பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
ஆனாலும், தொடர்ந்து தனது சமூகவலைதளப் பக்கங்கள் வாயிலாக ஏதாவது பரபரப்பை ஏற்படுத்துவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

நடிப்பில் கவனம்:
ஸ்ரீரெட்டி சமீபகாலமாக யார் மீதும் பாலியல் புகார் கூறாமல், நடிப்பில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். தனது வாழ்க்கைப் படத்தில் தற்போது நடித்து வருகிறார். அப்பட ரிலீசுக்குப் பின்னர் மேலும் பலரது முகத்திரை கிழியும் என மிரட்டி வருகிறார். தெலுங்கை விட தமிழில் தீவிரமாக பட வாய்ப்புகளைத் தேடி வருகிறார்.

ஆம்லெட்:
இந்நிலையில், தற்போது சந்தானத்தின் ஏ1 (அக்யூஸ்ட் நம்பர் 1) படப் பாடல் ஒன்றிற்கு ஆக்ஷன் செய்த வீடியோவை அவர் வெளியிட்டுள்ளார். ‘மாலைநேரம் மல்லிப்பூ.. மல்லிப்பூ' எனத் தொடங்கும் அந்தப் பாடலின் இறுதியில் ஆம்லெட் போட்டு டயலாக்கும் பேசியுள்ளார் ஸ்ரீரெட்டி. இந்த வீடியோவை அவரது ரசிகர்கள் சமூகவலைதளப் பக்கங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

வலுக்கும் எதிர்ப்பு:
ஏற்கனவே, சந்தானம் தனது படத்தில் குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களை இழிவு செய்து விட்டதாக எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன. படம் திட்டமிட்டபடி ரிலீசாகுமா இல்லை தள்ளிப் போகுமா என்ற சந்தேகம் நீடித்து வருகிறது. இதில் எரிகிற தீயில் எண்ணெய் விடுவது போல், ஸ்ரீரெட்டி இந்த வீடியோவை வெளியிட்டு மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
ஆபாசப் பதிவு:
தனது பிரச்சினை மட்டுமின்றி, மற்றவர்கள் பிரச்சினையிலும் அதிக அக்கறை கொண்டு சமூகவலைதளப் பக்கத்தில் பதிவுகளை வெளியிட்டு வருகிறார் ஸ்ரீரெட்டி. சமயத்தில் அவரது பதிவுகள் ஆபாசத்தின் உச்சமாக இருப்பது பலரையும் முகம் சுளிக்க வைத்து விடுகிறது. ஆனாலும், தொடர்ந்து சமூகவலைதளங்களில் வீடியோ பதிவுகளை வெளியிடுவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார் ஸ்ரீரெட்டி.


Click it and Unblock the Notifications











