ராகவா லாரன்ஸ் என்ன செய்யச் சொன்னார், இந்த ஸ்ரீ ரெட்டி என்ன செய்கிறார் பாருங்க
Recommended Video

சென்னை: ராகவா லாரன்ஸின் சவாலை ஏற்பதாக கூறிவிட்டு நடிகை ஸ்ரீ ரெட்டி ஆன்லைனில் டப்ஸ்மாஷ் வீடியோக்களை மட்டும் அப்லோடு செய்து வருகிறார்.
தன் மீது பாலியல் புகார் தெரிவித்த தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டியை மீடியாவுக்கு முன்பு ஆடிஷன் நடத்தி அதில் அவர் சிறப்பாக நடித்தால் அடுத்த படத்தில் வாய்ப்பு தருவதாகக் கூறி சவால் விட்டார் நடிகரும், டான்ஸ் மாஸ்டருமான ராகவா லாரன்ஸ்.
இதையடுத்து ராகவா லாரன்ஸின் சவாலை ஏற்பதாக ஸ்ரீ ரெட்டி ஃபேஸ்புக்கில் தெரிவித்தார்.

மீடியா
மீடியா முன்பு ஆடிஷன் நடக்கும் அதில் ஸ்ரீ ரெட்டி வந்து தனது திறமையை காட்டப் போகிறார் என்று நினைத்தால் அவரோ டப்ஸ்மாஷ் வீடியோக்களை ஃபேஸ்புக்கில் அப்லோடு செய்து வருகிறார். லாரன்ஸ் மாஸ்டருக்கு என்று குறிப்பிட்டு வெளியிடப்பட்டுள்ள வீடியோவில் அவர் ஒன்றும் நடிக்கவில்லை.

ஸ்ரீ ரெட்டி
என்னை அனைவரும் ஒதுக்கி வைக்கிறார்கள். என்னுடன் இந்த பிரபலங்கள் எல்லாம் படுக்கையை பகிர்ந்தது உண்மை தான். அதற்கான ஆதாரங்கள் உள்ளன என்று கூறி வருகிறார் ஸ்ரீ ரெட்டி. தொடர்ந்து புகார் தெரிவித்து வரும் அவர் எந்த ஆதாரத்தையும் வெளியிடவில்லை. ஒரு பேட்டியில் ஆதாரம் இருக்கிறது என்கிறார், மறுபேட்டியில் படுக்கையில் இருக்கும்போது எப்படி வீடியோ எடுப்பது என்று கேட்கிறார்.
லாரன்ஸ்
ஸ்ரீ ரெட்டி கேட்ட வாய்ப்பை ராகவா லாரன்ஸ் கொடுத்துவிட்டார். லாரன்ஸ் கூறியபடி ஆடிஷனில் கலந்து கொண்டு சிறப்பாக நடித்தால் பட வாய்ப்பு கிடைக்கப் போகிறது. இப்படி தன்னை தேடி ஒரு வாய்ப்பு வந்தும் அதை பயன்படுத்திக்கொள்ளாமல் டப்ஸ்மாஷ் வீடியோக்களை வெளியிட்டுக் கொண்டிருக்கிறாரே ஸ்ரீ ரெட்டி.

பயம்
ஸ்ரீ ரெட்டி சென்னை வந்தபோது அவரை பேட்டி எடுத்த சிலர் கூட நாம் இருவரும் சேர்ந்து ஒரே சோபாவில் அமர்ந்திருக்கிறோம் என்பதால் என்னை வம்பில் மாட்டிவிட மாட்டீர்களே என்று கேட்டனர். இதை எல்லாம் மனதில் வைத்து தான் தனியாக இல்லாமல் மீடியா முன்பு ஆடிஷனுக்கு வருமாறு அழைத்துள்ளார் ராகவா லாரன்ஸ்.

உண்மையா?
அந்த பிரபலம் என்னுடன் படுக்கையை பகிர்ந்தார், இந்த பிரபலம் என்னை தவறாக பயன்படுத்திவிட்டார் என்று கூறி வரும் ஸ்ரீ ரெட்டி மீது தற்போது பலருக்கும் சந்தேகம் எழ ஆரம்பித்துவிட்டது. ஆதாரத்தையும் அளிக்க மறுக்கிறார், மீடியா முன்பு ஆடிஷனுக்கும் வரவில்லை. அவர் பக்கம் உண்மை இருந்து திறமை இருந்தால் ஆதாரங்களை வெளியிட்டுவிட்டு மீடியா முன்பு ஆடிஷனுக்கு வரலாமே என்ற பேச்சு கிளம்பியுள்ளது.


Click it and Unblock the Notifications











