ஸ்ரீரெட்டி வெளியிட்ட அடுத்த நடிகர் யார் தெரியுமா?
தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி அடுத்ததாக ஒரு இளம் நடிகரின் பெயரை தமிழ்லீக்ஸில் வெளியிட்டுள்ளார்.
Recommended Video

ஹைதராபாத்: தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி தொடர்ச்சியாக தமிழ், தெலுங்கு பிரபலங்களின் பெயர்களை வெளியிட்டு வருகிறார். அந்தவகையில் தற்போது நடிகர் சந்தீப் கிஷன் பெயரை வெளியிட்டுள்ளார்.
தெலுங்கு நடிகரான சந்தீப் கிஷன் யாருடா மகேஷ், மாநகரம், நெஞ்சில் துணிவிருந்தால், மாயவன், நரகாசூரன் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

இந்த உலகத்திலேயே மிகவும் மோசமான, தவறான அணுகுமுறை கொண்ட அழுக்கான மனிதன் என்று சொல்லி இன்னும் சில தகாத வார்த்தைகளால் திட்டி அது வேறு யாரும் இல்லை சந்தீப் கிஷன் என்று பதிவிட்டுள்ளார் ஸ்ரீ ரெட்டி.
எந்தவித ஆதாரமும் இல்லாமல் அவதூறு பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என விஷால் எச்சரித்திருந்தார். ஆனாலும், எதைப்பற்றியும் கவலைப்படாமல் ஸ்ரீரெடி தொடர்ச்சியாக புகார் கூறிக்கொண்டே இருக்கிறார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய டி.ராஜேந்தர், நல்ல மனிதர்கள் இருக்கும் இதே சினிமாவில்தான் பெண்களை வாய்ப்பு தருகிறேன் எனக் கூறி தவறாக பயன்படுத்துபவர்களும் இருக்கிறார்கள். இது கண்டிக்கத்தக்க விஷயம், அவர்கள் தானாக திருந்திக்கொள்ள வேண்டும் என்று கூறியிருந்தார்
டி.ராஜேந்தருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அவரின் பாதத்தின்கீழ் என் தலையை வைத்து வணங்க கடமைப்பட்டுள்ளேன் என ஸ்ரீரெட்டி தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











