இந்த பொண்ணுக்கு ரொம்பத்தான் துணிச்சல்.. கைது என செய்தி போட்ட யூட்யூப் சேனலை காரி துப்பிய ஸ்ரீரெட்டி!
கைது செய்யப்பட்டதாக செய்தி போட்ட யூட்யூப் சேனலை நடிகை ஸ்ரீரெட்டி பேஸ்புக்கில் காரி துப்பியுள்ளார்.
Recommended Video

சென்னை: கைது செய்யப்பட்டதாக செய்தி போட்ட யூட்யூப் சேனலை நடிகை ஸ்ரீரெட்டி பேஸ்புக்கில் காரி துப்பியுள்ளார்.
தெலுங்கு நடிகையான ஸ்ரீரெட்டி யாரைப் பற்றியும் கவலைப்படாமல் தன்பாட்டுக்கு குற்றச்சாட்டுக்களை அள்ளி வீசி வருகிறார்.
தமிழ், தெலுங்கு என பாரபட்சம் இல்லாமல் பாலியல் உறவுக்காக பயன்படுத்தியவர்களின் பட்டியலை வெளியிட்டு பீதியை கிளப்பி வருகிறார்.

ஸ்ரீரெட்டி குறித்து புகார்
தொடர்ந்து குற்றச்சாட்டுக்களை கூறிய ஸ்ரீரெட்டிக்கு நடிகர் சங்கம் கண்டனம் தெரிவித்தது. இந்த நிலையில் சினிமா டைரக்டரும், நடிகரும், இந்தியன் மக்கள் மன்ற தலைவருமான வாராகி நேற்று சென்னையில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு சென்று ஸ்ரீரெட்டி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மனு கொடுத்தார்.

ஸ்ரீரெட்டி மீது வழக்குப்பதிவு
அதில் நடிகர்கள், இயக்குனர்களிடம் பணம் பறிக்க நடிகை ஸ்ரீரெட்டி முயற்சி செய்வதாகவும் அவர் மீது விபசார பிரிவின் கீழும், மிரட்டி பணம் பறிக்கும் பிரிவின் கீழும் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஸ்ரீரெட்டி கைது
இதைத்தொடர்ந்து ஸ்ரீரெட்டி கைது செய்யப்பட்டார் என யூட்யூப் சேனல் ஒன்று செய்தி வெளியிட்டதாக தெரிகிறது.

கெட்டவார்த்தையால் திட்டி
இதனை அறிந்த ஸ்ரீரெட்டி கெட்டவார்த்தையால் திட்டியதோடு அந்த யூட்யூப் சேனலுக்கும் அஞ்சலி செலுத்தியுள்ளார்.
காரி துப்பிய ஸ்ரீரெட்டி
நான் கைது செய்யப்பட்டேனா? என்று கேட்டதோடு தூ... என துப்பியுள்ளார். ஃபேக் மனிதர்கள் ஃபேக் நியூஸ் என்றும் கோபமாக தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கோபமாக பதிவிட்டுள்ளார் ஸ்ரீரெட்டி.


Click it and Unblock the Notifications











