Sri Reddy: இப்படியெல்லாம் நீங்க பண்ணா பசங்க நிலைமை ரொம்ப பாவம்.. ஸ்ரீரெட்டியின் செம வொர்க்கவுட்!
ஹைதராபாத்: பவன் கல்யாண், விஷால், ஸ்ரீகாந்த் என ஏகப்பட்ட நடிகர்கள் பற்றி அதிர்ச்சியளிக்கும் விஷயங்களை சொல்லி சாலையில் இறங்கி அரைநிர்வாண போராட்டத்தையே செய்த ஸ்ரீரெட்டி சமீப காலமாக யூடியூப் சேனல், இன்ஸ்டாகிராம் என ரசிகர்களை என்டர்டெயின் செய்து வருகிறார்.
லேட்டஸ்ட்டாக அவர் தனது இன்ஸ்டாகிராமில் இன்று வெளியிட்டுள்ள வொர்க்கவுட் வீடியோ இளைஞர்களை சூடாக்கி வருகிறது.

ஸ்ரீரெட்டி: நேனு நானே அப்பதம், அரவிந்த் 2 மற்றும் ஜிந்தகி உள்ளிட்ட தெலுங்கு படங்களில் நடித்த ஸ்ரீரெட்டி சினிமா வாய்ப்புக்காக தேடி அலைந்ததாகவும் பல நடிகர்கள் தன்னை படுக்கைக்கு அழைத்து படாதபாடு படுத்தி விட்டு சினிமா வாய்ப்புகளே தரவில்லை என திடீரென அரை நிர்வாண போராட்டத்தை நடத்தி அதிர வைத்தார்.
லாரன்ஸ் சொல்லியும் கேட்கல: நடிகர் லாரன்ஸ் ஸ்ரீரெட்டி வைத்த குற்றச்சாட்டையும் தாண்டி உங்களுக்கு நான் வாய்ப்புத் தருகிறேன் என சொல்லியும் அவரது படத்தில் நடிக்க ஸ்ரீரெட்டி விருப்பம் தெரிவிக்கவில்லை. நடிகர்கள் மீது அபாண்டமான பழி போடுகிறார் என சினிமா வட்டாரங்கள் இவரை முற்றிலுமாக தடை செய்தே விட்டன.
அனகோண்டா மேட்டர்: மார்க் ஆண்டனி படத்தில் விஷால் பேசிய அனகோண்டா வசனம் மற்றும் அந்த அணகோண்டா துப்பாக்கி எல்லாத்துக்கும் காரணமே இந்த ஸ்ரீரெட்டி தான். நடிகர் விஷாலை அவர் அனகோண்டா என பேட்டி ஒன்றில் மோசமாக பேசியது தான் இந்த பஞ்சாயத்துக்கே காரணம் என்றனர்.
ஸ்ரீரெட்டி வொர்க்கவுட்: இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து ஆக்டிவாக இருந்து வரும் ஸ்ரீரெட்டி ஏகப்பட்ட போட்டோக்களையும் வீடியோக்களையும் பதிவிட்டு வருகிறார். எல்லாமே ஒரு மார்க்கமாக இருப்பதால் இளைஞர்கள் ஏகப்பட்ட ஹார்ட்டீன்களை விட்டு வருகின்றனர். இந்நிலையில், தற்போது மார்னிங் வொர்க்கவுட் என தொடையழகு தெரிய ஸ்ரீரெட்டி வொர்க்கவுட் செய்த வீடியோவை வெளியிட்டு இளைஞர்களை மட்டுமின்றி இணையத்தையே சூடாக்கி உள்ளார்.
மோசமான வீடியோக்கள்: வொர்க்கவுட் வீடியோவே படு மோசமாகத்தான் உள்ளது. அதை விட மோசமாக ஏகப்பட்ட வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு பிட்டு பட நடிகை போலவே மாறிவிட்டார் ஸ்ரீரெட்டி. பூனம் பாண்டே போலவே இவருக்கும் பட வாய்ப்புகள் ஏதும் கிடைக்காத நிலையில், சர்ச்சை வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.


Click it and Unblock the Notifications











