இந்த 'ஸ்ரீ லீக்ஸ்' எப்படி துவங்கியது?: உண்மையை சொன்ன ஸ்ரீ ரெட்டி

By Siva

Recommended Video

ஸ்ரீ லீக்ஸ் எப்படி துவங்கியது?: சொல்கிறார் ஸ்ரீ ரெட்டி- வீடியோ

ஹைதராபாத்: ஸ்ரீலீக்ஸ் என்ற பெயரில் பிரபலங்களின் பெயர்களை வெளியிடுவது எப்படி துவங்கியது என நடிகை ஸ்ரீ ரெட்டி தெரிவித்துள்ளார்.

திரையுலகில் பட வாய்ப்புக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் நபர்களின் பெயர்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டு வருகிறார் தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி.

ஸ்ரீ லீக்ஸ் என்ற பெயரில் அவர் பலரின் பெயர்களை வெளியிடுகிறார். இந்த ஸ்ரீலீக்ஸ் எப்படி துவங்கியது என்று ஸ்ரீ ரெட்டி கூறியதாவது,

ஸ்ரீலீக்ஸ்

ஸ்ரீலீக்ஸ்

பலரும் நினைப்பது போன்று இது திட்டமிட்டு துவங்கப்பட்டது இல்லை. நான் ஜர்னலிசம் படித்துள்ளேன். சில டிவி நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளேன். யூடியூப் சேனல் நடத்தும் நண்பர் ஒருவர் சினிமாவில் பெண்கள் படும் கஷ்டம் பற்றி என்னிடம் கேட்டார்.

வீடியோ

வீடியோ

நண்பரிடம் நான் கூறியதை வீடியோ எடுத்து ஆன்லைனில் வெளியிட்டுவிட்டார். அந்த வீடியோவை நியூஸ் சேனல்கள் பார்த்துவிட்டு என்னிடம் கேட்டார்கள்.

தைரியம்

தைரியம்

ஒரு ஜர்னலிஸ்டாக இந்த விஷயம் குறித்து நான் தைரியமாக பேசினேன். தவறு செய்த யாருக்கும் எதிராக நான் போர் துவங்க விரும்பவில்லை. நான் பேசிய விஷயங்கள் வெளியே வந்த பிறகு போராக மாறிவிட்டது. என் குடும்பம், நண்பர்கள் என்னை விட்டு சென்றுவிட்டார்கள். நான் தனியாக உள்ளேன்.

கெரியர்

கெரியர்

நான் ஒரு பக்கம் இருக்க, அதிகாரம் படைத்தவர்கள் மறுபக்கம் உள்ளனர். நான் பிரபலங்களின் பெயர்களை வெளியிடுவதால் ஏற்படும் பின்விளைவுகள் பற்றி எனக்கு தெரியும். என் கெரியர், என் வாழ்க்கையை பணையம் வைத்து நான் இந்த அவலங்களை வெளியே கொண்டு வந்துள்ளேன்.

பாதுகாப்பு

பாதுகாப்பு

பெண்களுக்கு சுத்தமாக பாதுகாப்பு இல்லாத இடம் தெலுங்கு திரையுலகம். பெரிய நடிகைகள் முதல் வளர்ந்து வரும் நடிகைகள் வரை அனைத்து நடிகைகளும் படுக்கைக்கு செல்ல வேண்டியதாக உள்ளது. தெலுங்கு பெண்கள் கருப்பாக இருப்பதால் அவர்களை ஹீரோயினாக்குவது இல்லை.

உல்லாசம்

உல்லாசம்

தெலுங்கு நடிகைகளை நடிக்க வைத்தால் ஷூட்டிங் முடிந்ததும் வீட்டிற்கு சென்றுவிடுவார்கள். வெளிமாநில நடிகைகளை நடிக்க வைத்தால் அவர்கள் ஷூட்டிங் முடிந்த உடன் ஹோட்டலுக்கு செல்வார்கள். அங்கு அவர்களுடன் உல்லாசமாக இருக்கலாம் என்பதால் வெளிமாநில நடிகைகளை அதிக அளவில் நடிக்க வைக்கிறார்கள் என்றார் ஸ்ரீ ரெட்டி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X