சினிமாவில் இருந்து கிரிக்கெட் பக்கம் திரும்பிய ஸ்ரீரெட்டி புயல்.. முதல் தாக்கு யார் மீது தெரியுமா?
சச்சின் மீது பாலியல் புகார் கூறியுள்ளார் நடிகை ஸ்ரீரெட்டி.
சென்னை: கிரிக்கெட் கடவுள் என ரசிகர்களால் கொண்டாடப்படும் பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் மீது சர்ச்சை நடிகை ஸ்ரீரெட்டி பாலியல் புகார் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கு திரையுலகில் நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் மீது பாலியல் புகார் தெரிவித்து பிரபலமானவர் நடிகை ஸ்ரீரெட்டி. பின்னர் சென்னை வந்த இவர், இங்குள்ள பிரபல இயக்குநர்களான சுந்தர்.சி, முருகதாஸ், ராகவா லாரன்ஸ் உள்ளிட்டோர் மீது பாலியல் புகார் தெரிவித்தார்.
இது தொடர்பாக ஸ்ரீரெட்டி மீது வழக்கும் தொடரப்பட்டது. தற்போது அவரது கதை சினிமாவாக எடுக்கப்பட்டு வருகிறது. இப்படத்தில் அவரே நாயகியாக நடிக்கிறார்.

பாலியல் புகார்:
படப்பிடிப்பு காரணமாக சில காலம் அமைதியாக இருந்த ஸ்ரீரெட்டி மீண்டும் தனது பாலியல் புகார் படலத்தை ஆரம்பித்துள்ளார். இம்முறை அவர் சினிமா பிரபலங்கள் மீது புகார் கூறாமல், பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் பற்றி அவர் பேஸ்புக்கில் தவறான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மறைமுகத் தாக்கு:
சம்பந்தப்பட்டவர்களை இதுவரை நேரடியாக பெயர் குறிப்பிட்டு தாக்கி வந்த ஸ்ரீரெட்டி, சச்சின் விவகாரத்தில் மட்டும் மறைமுகமாக குற்றம் சாட்டியுள்ளார். அதோடு, இப்பதிவில் தன்னைப் பற்றி அவர் கூறாமல் மற்றொரு நடிகை பற்றி அவர் தெரிவித்துள்ளார்.

சார்மிங் நடிகை:
மேலும் இது தொடர்பாக அப்பதிவில் அவர் கூறியிருப்பதாவது, "சச்சின் டெண்டுல்கரன் என்ற ஒரு ரொமாண்டிக்கான ஆள், ஹைதராபாத் வந்த போது, "சார்மி'ங்" ஆன பெண்ணை சந்தித்தார். அதற்கு, சாமுண்டேஸ்வர் சாமி என்பவர் உடந்தை" எனத் தெரிவித்துள்ளார். இதில் சார்மிங் பெண் என அவர் குறிப்பிடுவது நடிகை சார்மி எனக் கூறப்படுகிறது.

ரசிகர்கள் கோபம்:
ஸ்ரீரெட்டியின் இந்தப் புகார் தொடர்பாக சச்சின் தரப்பில் இருந்து இதுவரை எந்தவித மறுப்போ அல்லது பதிலோ வரவில்லை. ஆனால், கிரிக்கெட் கடவுள் நாடுமுழுவதும் கொண்டாடப்படும் சச்சின் மீது ஸ்ரீரெட்டி இப்படி பாலியல் புகார் கூறியிருப்பது அவரது ரசிகர்களை கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











