என்னடா நீலாம்பரிக்கு வந்த சோதனை?.. படையப்பா பஞ்ச் வசனத்தை ஸ்ரீரெட்டி எப்படி பேசியிருக்காரு பாருங்க!

ஹைதராபாத்: கோலிவுட் மற்றும் டோலிவுட்டில் உள்ள சில முன்னணி நடிகர்கள் தன்னிடம் தவறாக நடந்துக் கொண்டனர் என்றும் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்தனர் என விஷால் முதல் ஆந்திராவின் துணை முதல்வராக உள்ள பவன் கல்யாண் வரை பல நடிகர்கள் பற்றி பேசி சர்ச்சையை கிளப்பியவர் தான் ஸ்ரீரெட்டி.

உச்சகட்டமாக சாலையில் இறங்கி ஆடைகளை கழட்டி போராட்டம் செய்த ஸ்ரீரெட்டி சமீப காலமாக சர்ச்சை ஏதும் கிளப்பாமல் சோஷியல் மீடியாவில் வீடியோக்களையும், போட்டோக்களையும் பதிவிட்டு ரசிகர்களுக்கு கிளாமர் விருந்து கொடுத்து வருகிறார்.

Sri Reddy Padayappa heroine

புதிதாக அவர் தனது இன்ஸ்டாகிராமில் இன்று வெளியிட்டுள்ள படையப்பா பஞ்ச் டயலாக் வீடியோ நெட்டிசன்களால் பயங்கரமாக ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.

அடுத்த மீரா மிதுன்: நேனு நானே அப்பதம், அரவிந்த் 2 மற்றும் ஜிந்தகி உள்ளிட்ட தெலுங்கு படங்களில் நடித்த பிரபலமானவர் ஸ்ரீரெட்டி. சினிமா சான்ஸ் தேடி அலைந்த இவர் பல சினிமா நடிகர்களுடன் அட்ஜெஸ்ட்மென்ட் செய்ததாக பரபரப்பை கிளப்பி இருந்தார். டோலிவுட்டின் முன்னணி நடிகரான பவன் கல்யாண் முதல் கோலிவுட்டில் ஸ்ரீகாந்த், விஷால் உள்ளிட்ட பலர் மீது குற்றச்சாட்டுகளை அடுக்கினார். சோஷியல் மீடியாவில் சர்ச்சைகளை கிளப்பிய மீரா மிதுன் போலவே இவரும் சில காலம் டிரெண்டாகி பின்னர் சைலண்ட் ஆகி விட்டார்.

மோசமான வீடியோக்கள்: சோஷியல் மீடியாவில் கவர்ச்சிகரமாக போட்டோக்களையும் வீடியோக்களையும் பதிவிட்டு ரசிகர்களை தூங்க விடாமல் செய்து வரும் ஸ்ரீரெட்டி படுமோசமான ஜிம் வொர்க்கவுட் வீடியோக்களையும் ஆபாசமாக சேலையை அணிந்துக் கொண்டு போஸ் கொடுத்தும் எல்லை மீறி வருகிறார்.

நீலாம்பரியாக மாறிய ஸ்ரீரெட்டி: சினிமா வாய்ப்புகள் சுத்தமாக குறைந்து விட்ட நிலையில், சோஷியல் மீடியாவில் ரீல்ஸ் வீடியோக்களை போட்டு வருகிறார் ஸ்ரீரெட்டி. படையப்பா படத்தில் நீலாம்பரியாக நடித்த ரம்யா கிருஷ்ணன் பேசிய பவர்ஃபுல்லான பஞ்ச் வசனத்தை எந்தளவுக்கு கெடுக்க முடியுமோ அந்தளவுக்கு கெடுத்து விட்டார் ஸ்ரீரெட்டி என அவரது நீலாம்பரி வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.

வேற டிரெஸ்ஸே கிடைக்கலையா?: ஸ்ரீரெட்டியின் வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் ரம்யா கிருஷ்ணன் மேம் கண்ணில் மட்டும் இதை யாரும் படாமல் பார்த்துக்கோங்க என்றும் படையப்பா வசனம் பேசுவதற்கு உங்களுக்கு வேற டிரெஸ்ஸே கிடைக்கலையா? என படுமோசமாக கலாய்த்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X