சட்ட நடவடிக்கை பாயும், ஜாக்கிரதை: ஸ்ரீ ரெட்டி எச்சரிக்கை
Recommended Video

சென்னை: தனக்கு எதிராகவோ அல்லது வேறு பெண்களுக்கு எதிராகவோ யாராவது பேசினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார் நடிகை ஸ்ரீ ரெட்டி.
தெலுங்கு திரையுலகை அடுத்து தமிழ் திரையுலக பிரபலங்கள் சிலர் மீது பாலியல் புகார் தெரிவித்துள்ளார் ஸ்ரீ ரெட்டி. பட வாய்ப்பு தருவார்கள் என்று நம்பி அவர்களுடன் படுக்கைக்கு சென்றதாக அவர் கூறியுள்ளார்.

தற்போது சென்னை வந்துள்ள அவர் இது குறித்து விளக்கமாக பேட்டிகள் அளித்துள்ளார். தெரிந்தே படுக்கைக்கு சென்றுவிட்டு தற்போது வந்து புகார் தெரிவிப்பது சரியில்லை என்று பலரும் விமர்சிக்கிறார்கள்.
இந்நிலையில் ஸ்ரீ ரெட்டி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது,
நான் நடிகர் சங்கத்துடன் பேசி பிரச்சனையை தீர்க்க உள்ளேன். பெண்கள் பிரச்சனை பற்றி தான் பேச உள்ளேன். நாசரிடம் பேசியுள்ளன். என்ன நடக்கிறது என்று பார்ப்போம். பிரஸ் மீட் அல்லது மீடியா மூலம் எனக்கு எதிராகவோ, வேறு எந்த பெண்களுக்கு எதிராகவோ பேசினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். தேவையில்லாமல் பிரச்சனையில் சிக்கிக் கொள்ளாதீர்கள். நான் அளித்த புகார்கள் குறித்த எந்தவித விசாரணைக்கும் நான் தயார் என்கிறார்.


Click it and Unblock the Notifications











