அம்மா இடத்தை பிடிக்க ஆசைப்படும் ஸ்ரீதேவி மகள்.. தென்னிந்திய சினிமாவில் அறிமுகம்!

சென்னை: பாலிவுட் ரசிகர்களை கவர்ச்சியால் கவர்ந்திழுப்பவர் நடிகை ஜான்வி கபூர். ஸ்ரீ தேவியின் மகளான இவர் மிகவும் சுலபமாக சினிமாவில் நுழைந்துவிட்டார். தடக் திரைப்படத்தில் நடித்து ஹீரோயினாக அறிமுகமான ஜான்வி கபூர் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். தற்போது இவர் தென்னிந்திய சினிமாவில் அறிமுகமாகி உள்ளது குறித்து மனம் திறந்து பேட்டி அளித்துள்ளர்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பலமொழியில் நடித்து சினிமாவில் ஜாம்பவானாக திகழ்ந்தவர் நடிகை ஸ்ரீதேவி. இவருடன் ஜோடியாக நடிக்காத முன்னணி நடிகர்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு அனைத்து மொழிகளிலும் முன்னணி ஹீரோக்களுடனும் இவர் ஜோடி போட்டு நடித்துள்ளார். எந்த கதாபாத்திரம் என்றாலும் அதை கனகச்சிதமாக செய்து அசத்துவதில் ஸ்ரீ தேவி தான் பெஸ்ட் என பெயர் எடுத்தவர் ஸ்ரீதேவி.

Sridevi daughter Janhvi Kapoor opens up about south debut days

இவர் தயாரிப்பாளர் போனிக்கபூரை திருமணம் செய்து கொண்டு படங்களில் நடிப்பதில் இருந்து ஒதுங்கி இருந்தார். இந்தியா முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட ஸ்ரீ தேவி 2008ம் ஆண்டு உயிரிழந்தார். ஸ்ரீ தேவியின் மறைவுக்கு பிறகு, அவரது மகள் ஜான்வி கபூர் சினிமாவில் நடிக்க தொடங்கினார்.

ஜான்வி கபூர்: தடக் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான இவர், நேரடியாக ஒடிடியில் வெளியான குன்ஜன் சக்சேனா தி கார்கில் கேள் என்ற படத்தின் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமான நடிகையாக மாறினார். இந்த படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இதையடுத்து, கோஸ்ட் ஸ்டோரிஸ் மற்றும் தோஸ்தானா 2, ரூஹி அப்ஸானா, குட் லக் ஜெர்ரி ஆகிய படங்களில் படு பிஸியாக நடித்து வருகிறார். மேலும், இவர் நடிகர் ஷிகர் பஹாரினை காதலிப்பதாக பாலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்டது. ஆனால், இது குறித்து இருவரும் வாய் திறக்கவில்லை என்றாலும், பல இடங்களில் இவர்கள் ஜோடியாக காணப்படுகின்றனர்.

மகிழ்ச்சி அடைகிறேன்: தற்போது ஜான்வி கபூர், தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆருடன் தேவரா என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் வருகிற அக்டோபர் மாதம் வெளியாக உள்ளது. இந்நிலையில், நடிகை ஜான்வி கபூர் அளித்துள்ள பேட்டியில், தேவரா படத்தில் நானும் ஒரு பகுதியாக இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன், ஏனெனில் இந்த படத்தின் மூலம் நான் எனது வேர்களை நெருங்கியிருக்கிறேன். மேலும், தெலுங்கு மொழியையும் நான் கற்று வருகிறேன் என்று கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய ஜான்வி கபூர், இந்தியாவில் கிரிக்கெட் மற்றும் சினிமா மிகவும் பிடிக்கும். கிரிக்கெட் வீரர்களில் எனக்கு விராட் கோலி மற்றும் தினேஷ் கார்த்திக் எனக்கு மிகவும் பிடித்த வீரர் என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X