அமெரிக்காவில் வழுக்கி விழுந்தார் ஸ்ரீதேவி - காலில் பலத்த அடி
மும்பை நடிகை ஸ்ரீதேவி அமெரிக்காவில் வழுக்கி விழுந்து விட்டார். இதில் அவரது காலில் பலத்த அடி பட்டுள்ளது. இதனால் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
கால் மூட்டில் நல்ல அடி பட்டிருப்பதால் அவர் சிலநாட்கள் மருத்துவமனையில் இருப்பார் என்று தெரிகிறது.
ஸ்ரீதேவியுடன் அவரது கணவர் போனி கபூர், இரு மகள்களும் உடன் உள்ளனர்.

குடும்பத்தோடு சுற்றுப்பயணம்
ஸ்ரீதேவி தனது குடும்பத்தோடு அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் சென்றிருந்தார்.

திரும்பவிருந்த நிலையில் விபத்து
விடுமுறை முடிந்து தாயகம் திரும்ப ஆயத்தமாகி வந்த நிலையில் திடீரென ஹோட்டலில் தவறி விழுந்து விட்டார் ஸ்ரீதேவி.

மூட்டில் நல்ல அடி
இதில் அவரது கால் மூட்டில் நல்ல அடி விழுந்துள்ளது. காயமும் ஏற்பட்டுள்ளது. நடக்க முடியாமல் துடித்தார்.

ஸ்கேன் பார்த்தனர்
உடனடியாக அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு ஸ்கேன் செய்து பார்க்கப்பட்டது. தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார் ஸ்ரீதேவி.

அடுத்த மாதம் 50 வயது
ஸ்ரீதேவிக்கு அடுத்த மாதம் 13ம் தேதி 50 வயது பிறக்கிறது. இதை சிறப்பாக கொண்டாட முடிவு செய்திருந்தார். இந்த நிலையில் கீழே விழுந்து காயமடைந்துள்ளார் ஸ்ரீதேவி.


Click it and Unblock the Notifications











