ஜப்பானின் புதிய 'ரஜினிகாந்த்' ஆன ஸ்ரீதேவி
சென்னை: பட வசூலில் ஜப்பானின் புதிய ரஜினிகாந்த் நடிகை ஸ்ரீதேவி தான்.
பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்து குழந்தை குடும்பம் என்று இருந்த ஸ்ரீதேவி பல ஆண்டுகள் கழித்து இங்கிலிஷ் விங்கிலிஷ் படம் மூலம் ரீஎன்ட்ரி செய்தார்.
இந்தியில் எடுக்கப்பட்ட இந்த படம் தமிழ், தெலுங்கிலும் வெளியிடப்பட்டது.

சூப்பர் ஹிட்
ஆங்கிலம் தெரியாமல் கணவன் மற்றும் குழந்தைகள் முன்பு அசிங்கப்பட்டு பின்னர் ஆங்கிலம் கற்று அவர்களை அசத்தும் மனைவியாக ஸ்ரீதேவி நடித்த இந்த படம் சூப்பர் ஹிட்டானது.

பொறாமை
பல ஆண்டுகள் கழித்து ஸ்ரீதேவி நடிக்க வந்தபோதிலும் அவரது முதல் படமே இப்படி பாக்ஸ் ஆபீஸில் பட்டையை கிளப்பியது பல சீனியர் இந்தி நடிகைகளுக்கு சற்று பொறாமையை ஏற்படுத்தியது.

ஜப்பானில்
இங்கிலிஷ் விங்கிலிஷ் படம் ஜப்பான் மொழியில் ஜப்பானில் வெளியிடப்பட்டது. படம் ஸ்ரீதேவி நினைத்து பார்க்காத அளவுக்கு ஹிட்டாகியுள்ளது.

வசூல்
ஜப்பானில் ஸ்ரீதேவியின் படம் ரிலீஸான முதல் வாரத்தில் மட்டும் ரூ. 2 கோடியே 56 லட்சத்து 50 ஆயிரத்து 351 வசூல் செய்துள்ளது. கடந்த 28ம் தேதி ஜப்பானில் வெளியிடப்பட்ட இங்கிலிஷ் விங்கிலிஷ் 33 தியேட்டர்களில் ஓடுகிறது.

ரஜினி
ஜப்பானில் ஒரு இந்திய நடிகரின் படம் வசூலில் சக்கை போடு போடும் என்றால் அது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் படங்கள் தான்.

புதிய ரஜினி
தற்போது இங்கிலிஷ் விங்கிலிஷ் ஜப்பானில் நல்ல வசூல் செய்துள்ளதால் ஜப்பானின் புதிய ரஜினியாக ஸ்ரீதேவி உருவெடுத்துள்ளார்.


Click it and Unblock the Notifications











