இன்று ஸ்ரீதேவி பிறந்தநாள்: வைரலாகும் அவரின் கடைசி பிறந்தநாள் வீடியோ
சென்னை: நடிகை ஸ்ரீதேவியின் பிறந்தநாளான இன்று அவர் கடந்த ஆண்டு பிறந்தநாள் கொண்டாடியபோது எடுக்கப்பட்ட வீடியோ வைரலாகியுள்ளது.
நாத்தனார் மகனின் திருமணத்தில் கலந்து கொள்ள துபாய் சென்ற ஸ்ரீதேவி சவப்பெட்டியில் தான் இந்தியா திரும்பி வந்தார். ஸ்ரீதேவியின் பிறந்நதாளான இன்று அவரது ரசிகர்கள் அவரை நினைவுகூர்ந்துள்ளனர்.

மும்பையில் பாலிவுட் ஆர்ட் புராஜெக்ட் என்ற நிறுவனம் ஸ்ரீதேவி நினைவாக சுவரில் 18 அடிக்கு அவர் ஓவியத்தை வரைந்துள்ளது. ஸ்ரீதேவி இறந்துவிட்டாலும் அவரை நினைக்காத நாள் இல்லை என்று தெரிவித்துள்ளார் அவரின் கணவர் போனி கபூர்.
ஹீரோக்கள் இறந்தால் நினைவுகூரப்படுவார்கள். ஆனால் லெஜன்டுகள் இறப்பது இல்லை. ஸ்ரீதேவி ஒரு லெஜன்ட் என்று போனி கபூர் மேலும் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு பிறந்தநாளின்போது ஸ்ரீதேவி தனது கணவரின் கன்னத்தில் முத்தமிட பதிலுக்கு அவர் முத்தமிட்டபோது எடுக்கப்பட்ட வீடியோ தற்போது வைரலாகியுள்ளது.


Click it and Unblock the Notifications











