50 வயதானாலும் புதுப்பெண் போன்று கம்பீரமாக ராம்ப் வாக் செய்த ஸ்ரீதேவி
மும்பை: மும்பையில் நடந்து வரும் நகை ஃபேஷன் திருவிழாவில் நடிகை ஸ்ரீதேவி அசத்தலாக ராம்ப் வாக் செய்தார்.
மும்பையில் இந்தியா இன்டர்நேஷனல் ஜுவல்லரி வீக் 2014 என்ற நகை ஃபேஷன் திருவிழா நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு டிசைனர்கள் வடிவமைத்த நகைகளை மாடல்களும், நடிகைகளும் அணிந்து ராம்ப் வாக் செய்கிறார்கள்.
பாலிவுட்டின் இளம் நடிகைகள் முதல் சீனியர் நடிகைகள் வரை ராம்ப் வாக் செய்கிறார்கள்.

ஸ்ரீதேவி
50 வயதாகும் ஸ்ரீதேவி விக்ரம் பட்னிஸ் என்ற டிசைனர் வடிவமைத்த தங்க நிற லெஹங்கா, சோலி அணிந்து ராம்ப் வாக் செய்தார்.

நகைகள்
ஸ்ரீதேவி கொலேச்சா ஜுவல்ஸ் நகைகளை அணிந்து ராம்ப் வாக் செய்ததுடன் அவர் தான் ஷோ ஸ்டாப்பர்.

மணப்பெண்
மணப்பெண் என்ற தலைப்பில் நடந்த ஷோவில் ஸ்ரீதேவி வைர நகைகளை அணிந்து அசத்தலாக வந்தார்.

வயதே தெரியலையே!
ஸ்ரீதேவிக்கு இவ்வளவு வயதானாலும் ஃபேஷன் ஷோவில் மிகவும் இளமையாகத் தான் தெரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











