மெரில் ஸ்டிரீப்புடன் இணைந்து நடிப்பாரா ஸ்ரீதேவி...?
கோலிவுட், டோலிவுட், மல்லுவுட், பாலிவுட் என்று இத்தனை காலமாக நடித்து ஓய்ந்து விட்ட ஸ்ரீதேவி அடுத்து ஹாலிவுட்டுக்குப் புறப்படப் போகிறார்.
ஆஸ்கர் விருது வென்ற மெரில் ஸ்டிரீப்புடன் இணைந்து அவர் நடிக்கும் வாய்ப்புகள் பிரகாசமாகியுள்ளனவாம்.
தனது ஹாலிவுட் படம் தொடர்பான பேச்சுக்களில் ஈடுபட்டிருப்பதாக ஸ்ரீதேவியே உறுதிப்படுத்தியுள்ளார்.

இங்கிலீஷ் விங்கிலீஷ்
நீண்ட காலமாக நடிக்காமல் இருந்த ஸ்ரீதேவி சமீபத்தில்தான் இங்கிலீஷ் விங்கிலீஷ் படம் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார்.

நிஜமான ஆங்கிலப் படத்தில்
இப்போது ஒரிஜினல் ஆங்கிலப் படம் ஒன்றில் நடிக்க அவர் தயாராகி வருகிறார். அதாவது ஹாலிவுட்டில் என்ட்ரி கொடுக்கவுள்ளார்.

மாடு மேய்ப்பவர்களும், இந்தியர்களும்
இந்தப் படத்திற்கு கெளபாய்ஸ் அன்ட் இன்டியன்ஸ் என்று பெயரிட்டுள்ளார்களாம். இதை அப்படியே தமிழில் மொழி பெயர்த்தால் மாடு மேய்ப்பவர்களு்ம், இந்தியர்களும் என்று சொல்லலாம்.

இந்தியர்களைக் கிண்டலடிக்கப் போகிறார்களோ...?
படத்தின் டைட்டிலே வி்ல்லங்கமாக தெரிவதால் நிச்சயம் இந்தத் தலைப்புக்கு இந்தியாவில் எதிர்ப்புகள் எழலாம் என்று இப்போதே நம்பப்படுகிறது.

அமி ரெட்போர்ட் இயக்கத்தில்
பிரபல ஹாலிவுட் நடிகர், இயக்குநர் ராபர்ட் ரெட்போர்டின் மகள் அமி ரெட்போர்ட் இந்தப் படத்தை இயக்கவுள்ளார். மெரில் ஸ்டிரீப் இதில் நடிக்கிறார்.

பேச்சு தொடர்கிறது
இதுகுறித்து ஸ்ரீதேவி கூறுகையில், பேச்சுவார்த்தை தொடர்கிறது. இன்னும் முடிவாகவில்லை என்றார்.


Click it and Unblock the Notifications











