»   »  கன்னடத்துக்கு தாவிய ஸ்ரீதேவி விஜயக்குமார், மஞ்சுளா கலைக்குடும்பத்தின் கடைசி வாரிசான ஸ்ரீதேவி, தமிழ் கைவிட்ட நிலையில் கன்னடத்தில் தனதுஅதிர்ஷ்டத்தை பரிட்சித்துப் பார்க்க பெங்களூரில் தஞ்சம் அடைந்துள்ளார். விஜயக்குமாரின் குடும்பமே கலைச் சேவைக்காக தங்களை அர்ப்பணித்துக் கொண்டது. விஜயக்குமாரின் மகன் அருண்குமார்,மகள்கள் வனிதா, ப்ரீத்தா, கடைக் குட்டி ஸ்ரீதேவி என ஏகப்பட்ட வாரிசுகள். இவர்களில் அருண்குமார் இன்னும் தனது முத்திரையைப் பதிக்காமல் திணறி வருகிறார். வனிதாவும், ப்ரீத்தாவும்நடிப்பிலிருந்து விடைபெற்று விட்டனர். வனிதா டிவி நடிகர் ஆகாஷைத் திருமணம் செய்து கொண்டு செட்டிலானார் (இப்போதுவிவாகரத்து கோரியுள்ளார்!). ப்ரீத்தா இயக்குநர் ஹரியை மணந்து குடும்பத் தலைவியாகி விட்டார். இப்போது பீல்டில் இருப்பவர்கள் அருண்குமாரும், ஸ்ரீதேவியும் மட்டும் தான். அண்ணனைப் போலவே பிரேக் எதுவும்கிடைக்காமல் தட்டுத் தடுமாறி உலா வந்து கொண்டுள்ளார் ஸ்ரீதேவி. அவர் தமிழில் கடைசியாக நடித்த படம் தேவதையைக்கண்டேன். தேவதையைக் கண்டேனில் கிட்டத்தட்ட நெகட்டிவ் ரோலில் நடித்திருந்தார் ஸ்ரீதேவி. இதனால் தானோ என்னவோ அவருக்குஅதற்குப் பிறகு படமே இல்லாமல் போய் விட்டது. அது மட்டுமல்லாமல், கேரள நடிகைகளின் குலுக்கல் கிளாமருக்கு முன்னால் ஸ்ரீதேவியால் நிற்கக் கூட முடியவில்லை.ஏகப்பட்ட குத்தாட்ட குமரிகளின் வருகையாலும் அவர் அடியோடு மார்க்கெட் இழந்து விட்டார். தெலுங்கிலும் அவருக்கு அதிர்ஷ்டம் இல்லை. தமிழைக் கலக்கி வரும் கேரள மற்றும் மும்பை குஜிலிகளே தெலுங்கிலும் புகுந்துவிளையாடுவதால் ஸ்ரீதேவி ரொம்பவே நொந்து நூடூல்ஸாகி விட்டார்.இதனால் யாராலும் கவனிக்கப்படாமல் கிடக்கும் கன்னடத்தில் தனது அதிர்ஷ்டத்தை சோதித்துப் பார்க்க பெங்களூருக்கு இடம்பெயர்ந்துள்ளார். ஏற்கனவே காஞ்சன கங்கா என்ற கன்னடப் படத்தில் நடித்தவர் ஸ்ரீதேவி. அதற்குப் பிறகு தமிழில் தீவிர கவனம் செலுத்தியதால் கன்னடத்தில் தொடர்ந்து நடிக்கவில்லை. இப்போதுதான் மார்க்கெட் போண்டியாக விட்டதே, எனவே கன்னடப் பக்கம் மீண்டும் திரும்பியுள்ளார். ப்ரீத்திகாஜி என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார் ஸ்ரீதேவி. இந்தப் படம் வந்தால் கன்னடத்தில் ஓரிரு பட வாய்ப்புகள் வரலாம்என்ற நம்பிக்கையில் உள்ளார் ஸ்ரீதேவி. கன்னடமாவது அவரை கண்டுகொள்ளட்டும்.

கன்னடத்துக்கு தாவிய ஸ்ரீதேவி விஜயக்குமார், மஞ்சுளா கலைக்குடும்பத்தின் கடைசி வாரிசான ஸ்ரீதேவி, தமிழ் கைவிட்ட நிலையில் கன்னடத்தில் தனதுஅதிர்ஷ்டத்தை பரிட்சித்துப் பார்க்க பெங்களூரில் தஞ்சம் அடைந்துள்ளார். விஜயக்குமாரின் குடும்பமே கலைச் சேவைக்காக தங்களை அர்ப்பணித்துக் கொண்டது. விஜயக்குமாரின் மகன் அருண்குமார்,மகள்கள் வனிதா, ப்ரீத்தா, கடைக் குட்டி ஸ்ரீதேவி என ஏகப்பட்ட வாரிசுகள். இவர்களில் அருண்குமார் இன்னும் தனது முத்திரையைப் பதிக்காமல் திணறி வருகிறார். வனிதாவும், ப்ரீத்தாவும்நடிப்பிலிருந்து விடைபெற்று விட்டனர். வனிதா டிவி நடிகர் ஆகாஷைத் திருமணம் செய்து கொண்டு செட்டிலானார் (இப்போதுவிவாகரத்து கோரியுள்ளார்!). ப்ரீத்தா இயக்குநர் ஹரியை மணந்து குடும்பத் தலைவியாகி விட்டார். இப்போது பீல்டில் இருப்பவர்கள் அருண்குமாரும், ஸ்ரீதேவியும் மட்டும் தான். அண்ணனைப் போலவே பிரேக் எதுவும்கிடைக்காமல் தட்டுத் தடுமாறி உலா வந்து கொண்டுள்ளார் ஸ்ரீதேவி. அவர் தமிழில் கடைசியாக நடித்த படம் தேவதையைக்கண்டேன். தேவதையைக் கண்டேனில் கிட்டத்தட்ட நெகட்டிவ் ரோலில் நடித்திருந்தார் ஸ்ரீதேவி. இதனால் தானோ என்னவோ அவருக்குஅதற்குப் பிறகு படமே இல்லாமல் போய் விட்டது. அது மட்டுமல்லாமல், கேரள நடிகைகளின் குலுக்கல் கிளாமருக்கு முன்னால் ஸ்ரீதேவியால் நிற்கக் கூட முடியவில்லை.ஏகப்பட்ட குத்தாட்ட குமரிகளின் வருகையாலும் அவர் அடியோடு மார்க்கெட் இழந்து விட்டார். தெலுங்கிலும் அவருக்கு அதிர்ஷ்டம் இல்லை. தமிழைக் கலக்கி வரும் கேரள மற்றும் மும்பை குஜிலிகளே தெலுங்கிலும் புகுந்துவிளையாடுவதால் ஸ்ரீதேவி ரொம்பவே நொந்து நூடூல்ஸாகி விட்டார்.இதனால் யாராலும் கவனிக்கப்படாமல் கிடக்கும் கன்னடத்தில் தனது அதிர்ஷ்டத்தை சோதித்துப் பார்க்க பெங்களூருக்கு இடம்பெயர்ந்துள்ளார். ஏற்கனவே காஞ்சன கங்கா என்ற கன்னடப் படத்தில் நடித்தவர் ஸ்ரீதேவி. அதற்குப் பிறகு தமிழில் தீவிர கவனம் செலுத்தியதால் கன்னடத்தில் தொடர்ந்து நடிக்கவில்லை. இப்போதுதான் மார்க்கெட் போண்டியாக விட்டதே, எனவே கன்னடப் பக்கம் மீண்டும் திரும்பியுள்ளார். ப்ரீத்திகாஜி என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார் ஸ்ரீதேவி. இந்தப் படம் வந்தால் கன்னடத்தில் ஓரிரு பட வாய்ப்புகள் வரலாம்என்ற நம்பிக்கையில் உள்ளார் ஸ்ரீதேவி. கன்னடமாவது அவரை கண்டுகொள்ளட்டும்.

Subscribe to Oneindia Tamil
விஜயக்குமார், மஞ்சுளா கலைக்குடும்பத்தின் கடைசி வாரிசான ஸ்ரீதேவி, தமிழ் கைவிட்ட நிலையில் கன்னடத்தில் தனதுஅதிர்ஷ்டத்தை பரிட்சித்துப் பார்க்க பெங்களூரில் தஞ்சம் அடைந்துள்ளார்.

விஜயக்குமாரின் குடும்பமே கலைச் சேவைக்காக தங்களை அர்ப்பணித்துக் கொண்டது. விஜயக்குமாரின் மகன் அருண்குமார்,மகள்கள் வனிதா, ப்ரீத்தா, கடைக் குட்டி ஸ்ரீதேவி என ஏகப்பட்ட வாரிசுகள்.

இவர்களில் அருண்குமார் இன்னும் தனது முத்திரையைப் பதிக்காமல் திணறி வருகிறார். வனிதாவும், ப்ரீத்தாவும்நடிப்பிலிருந்து விடைபெற்று விட்டனர். வனிதா டிவி நடிகர் ஆகாஷைத் திருமணம் செய்து கொண்டு செட்டிலானார் (இப்போதுவிவாகரத்து கோரியுள்ளார்!). ப்ரீத்தா இயக்குநர் ஹரியை மணந்து குடும்பத் தலைவியாகி விட்டார்.

இப்போது பீல்டில் இருப்பவர்கள் அருண்குமாரும், ஸ்ரீதேவியும் மட்டும் தான். அண்ணனைப் போலவே பிரேக் எதுவும்கிடைக்காமல் தட்டுத் தடுமாறி உலா வந்து கொண்டுள்ளார் ஸ்ரீதேவி. அவர் தமிழில் கடைசியாக நடித்த படம் தேவதையைக்கண்டேன்.

தேவதையைக் கண்டேனில் கிட்டத்தட்ட நெகட்டிவ் ரோலில் நடித்திருந்தார் ஸ்ரீதேவி. இதனால் தானோ என்னவோ அவருக்குஅதற்குப் பிறகு படமே இல்லாமல் போய் விட்டது.

அது மட்டுமல்லாமல், கேரள நடிகைகளின் குலுக்கல் கிளாமருக்கு முன்னால் ஸ்ரீதேவியால் நிற்கக் கூட முடியவில்லை.ஏகப்பட்ட குத்தாட்ட குமரிகளின் வருகையாலும் அவர் அடியோடு மார்க்கெட் இழந்து விட்டார்.

தெலுங்கிலும் அவருக்கு அதிர்ஷ்டம் இல்லை. தமிழைக் கலக்கி வரும் கேரள மற்றும் மும்பை குஜிலிகளே தெலுங்கிலும் புகுந்துவிளையாடுவதால் ஸ்ரீதேவி ரொம்பவே நொந்து நூடூல்ஸாகி விட்டார்.

இதனால் யாராலும் கவனிக்கப்படாமல் கிடக்கும் கன்னடத்தில் தனது அதிர்ஷ்டத்தை சோதித்துப் பார்க்க பெங்களூருக்கு இடம்பெயர்ந்துள்ளார். ஏற்கனவே காஞ்சன கங்கா என்ற கன்னடப் படத்தில் நடித்தவர் ஸ்ரீதேவி.

அதற்குப் பிறகு தமிழில் தீவிர கவனம் செலுத்தியதால் கன்னடத்தில் தொடர்ந்து நடிக்கவில்லை.

இப்போதுதான் மார்க்கெட் போண்டியாக விட்டதே, எனவே கன்னடப் பக்கம் மீண்டும் திரும்பியுள்ளார்.

ப்ரீத்திகாஜி என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார் ஸ்ரீதேவி. இந்தப் படம் வந்தால் கன்னடத்தில் ஓரிரு பட வாய்ப்புகள் வரலாம்என்ற நம்பிக்கையில் உள்ளார் ஸ்ரீதேவி. கன்னடமாவது அவரை கண்டுகொள்ளட்டும்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil