தமிழுக்குத் திரும்பும் ஸ்ரீதேவிகா

உயிர், மிருகம் படங்களுக்குப் பிறகு தான் இயக்கும் புதிய படமான சரித்திரத்தில் நாயகியாக ஸ்ரீதேவிகாவை ஒப்பந்தம் செய்துள்ளார்.
இந்தப் படத்தின் கதை தமிழர்களின் வீர விளையாட்டான சிலம்பாட்டத்தை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. சிலம்ப வாத்தியாராக ராஜ்கிரணும், அவரது வாரிசாக மிருகம் படத்தில் நடித்த ஆதியும் நடிக்கிறார்கள்.
கதாநாயகி வேடத்துக்கு பலரையும் வரவழைத்துப் பார்த்த சாமிக்கு, எதிர்பார்த்த மாதிரி நாயகி அமையவில்லையாம். இதனால் புதுமுகம் யாரையாவது ஒப்பந்தம் செய்யும் முடிவிலிருந்தாராம். ஆனால் எதேச்சையாக ஸ்ரீதேவிகா படத்தைப் பார்த்தவர், யுரேகா... இதுதான் நான் தேடிய முகம், என ஸ்ரீதேவிகாவுக்குப் போன் போட்டிருக்கிறார்.
மறுபடியும் ஒரு பெரிய தமிழ்ப் படத்தில் வாய்ப்புக் கிடைத்த மகிழ்ச்சியில், சம்பளம் பற்றிக் கூடப் பேசாமல் ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட்டிருக்கிறார் தேவிகா.
இன்னொரு பஞ்சாயத்துக்கு வேலை வைக்காம சமர்த்தா நடிச்சுக் கொடுத்துடுங்க அம்மணி!


Click it and Unblock the Notifications











