»   »  ரூட்டை மாத்திய ஸ்ரீதேவிகா தமிழில் வாய்ப்புக்கள் இல்லாமல் போனதால் கன்னடம், மலையாளம் என ரூட்டை மாற்றிக் கொண்டுவிட்டார் ஸ்ரீதேவிகா.மலையாளத்து மங்கையான ஸ்ரீதேவிகாவிடம் கோலிவுட் விரும்பும் சாமாச்சாரங்கள் எல்லாமே நிறைய இருந்தாலும் அவர்நடித்த படங்கள் ஏதும் பெரிய அளவில் ஓடாததால் இன்னும் கண்டுகொள்ளப்படாமலேயே இருக்கிறார்.இத்தனைக்கும் இயக்குனர், தயாரிப்பாளர்கள் விரும்பும் வகையில் விட்டுக் கொடுத்து நடந்து கொள்ளவும் செய்கிறார்.கவர்ச்சியிலும் களமிறங்கிவிட்டார், ஆனாலும் அவருக்கு இன்னும் ஒரு பிரேக் கிடைத்தபாடில்லை.அதனால் வரும் வாய்ப்புக்களை எல்லாம் கதை கூட கேட்காமல் வெறும் சம்பளத்தை மட்டும் பேசிவிட்டு அள்ளிப் போட்டுக்கொள்கிறார். அந்த வகையில் தான் அன்பே வா என்று ஒரு படம் கிடைத்தது. அதில் ஹீரோவாக நடிக்கும் தென்றல் என்பவருக்கு வீட்டில்ஏகப்பட்ட பணம். பல தலைமுறையாக கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டிருக்கும் குடும்பம்.ஆனால், தென்றலுக்கு சினிமா மோகம். இதனால் சுமார் 60 லட்சத்தை எடுத்துக் கொண்டு தானே ஹீரோவாக நடித்து படம் எடுக்கவந்துவிட்டார் கோலிவுட்டுக்கு. மகனுக்காக தாயார் ஜெயந்தி கிருஷ்ணமூர்த்தியே கதை, திரைக்கதை எழுதி படத்தையும்தயாரிக்க முன் வந்தார். (எம்ஜிஆரிடம் அமைச்சராக இருந்த கே.ஏ.கிருஷ்ணசாமியின் தங்கை தான் இந்த ஜெயந்தி)ஆனால், இவருடன் ஜோடியாக நடிக்கத் தான் யாரும் முன் வரவில்லை. இந் நிலையில் தான் ஸ்ரீதேவிகாவிடம் போயிருக்கிறார்.தென்றலைப் பார்த்து முதலில் அதிர்ந்தவர், பெரிய சம்பளத்தைத் தரத் தயார் என்றதும் உடனே நடிக்க ஓகே சொல்லிவிட்டாராம்.இப்போது இந்தப் படம் தயாராகிவிட்ட நிலையில் வாங்கத்தான் ஆளில்லை. இதை முன்பே அறிந்ததாலோ என்னவோ, இந்தப்படத்தின் ரிலீஸ் பற்றியெல்லாம் எந்தவித கவலையும் இல்லாமல் கன்னடத்துக்குப் போய்விட்டார். அங்கும் தென்றல்கள் மாதிரியான ஹீரோக்களுடன் நடித்துக் கொண்டிருக்கிறார். கன்னடத்தில் உருவாரும் ஆட்டோகிராப்படத்தில் கோபிகா கேரக்டரை இவர் தான் செய்யப் போகிறாராம். (ஸ்னேகா கேரக்டரை செய்யப் போவது மீனா). கூடவே சொந்தமொழியான மலையாளத்தையும் விடவில்லை ஸ்ரீதேவிகா.எந்த மொழியில் நடிக்கப் போனாலும் கண் எல்லாம் தமிழ், தெலுங்கில் தான் இருக்கிறதாம். தமிழ் இன்னும் கைகொடுக்காதநிலையில் தெலுங்கில் இவர் எடுத்த முயற்சிகளுக்கு பலன் கிடைக்க ஆரம்பித்திருக்கிறதாம்.நான் தாண்ட போலீஸ் டாக்டர் ராஜசேகருக்கு ஜோடியாக நடிக்க தெலுங்கில் இருந்து அழைப்பு வந்துள்ளதாம். விரைவில்தெலுங்கில் ஹீரோயினாக எண்ட்ரி கொடுக்கப் போகிறார் ஸ்ரீதேவிகா.இதற்கிடையே இவருடன் அன்பே வாவில் நடித்த தென்றல் அடுத்து ஒரு படத்தை தயாரிக்கப் போகிறாராம்.

ரூட்டை மாத்திய ஸ்ரீதேவிகா தமிழில் வாய்ப்புக்கள் இல்லாமல் போனதால் கன்னடம், மலையாளம் என ரூட்டை மாற்றிக் கொண்டுவிட்டார் ஸ்ரீதேவிகா.மலையாளத்து மங்கையான ஸ்ரீதேவிகாவிடம் கோலிவுட் விரும்பும் சாமாச்சாரங்கள் எல்லாமே நிறைய இருந்தாலும் அவர்நடித்த படங்கள் ஏதும் பெரிய அளவில் ஓடாததால் இன்னும் கண்டுகொள்ளப்படாமலேயே இருக்கிறார்.இத்தனைக்கும் இயக்குனர், தயாரிப்பாளர்கள் விரும்பும் வகையில் விட்டுக் கொடுத்து நடந்து கொள்ளவும் செய்கிறார்.கவர்ச்சியிலும் களமிறங்கிவிட்டார், ஆனாலும் அவருக்கு இன்னும் ஒரு பிரேக் கிடைத்தபாடில்லை.அதனால் வரும் வாய்ப்புக்களை எல்லாம் கதை கூட கேட்காமல் வெறும் சம்பளத்தை மட்டும் பேசிவிட்டு அள்ளிப் போட்டுக்கொள்கிறார். அந்த வகையில் தான் அன்பே வா என்று ஒரு படம் கிடைத்தது. அதில் ஹீரோவாக நடிக்கும் தென்றல் என்பவருக்கு வீட்டில்ஏகப்பட்ட பணம். பல தலைமுறையாக கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டிருக்கும் குடும்பம்.ஆனால், தென்றலுக்கு சினிமா மோகம். இதனால் சுமார் 60 லட்சத்தை எடுத்துக் கொண்டு தானே ஹீரோவாக நடித்து படம் எடுக்கவந்துவிட்டார் கோலிவுட்டுக்கு. மகனுக்காக தாயார் ஜெயந்தி கிருஷ்ணமூர்த்தியே கதை, திரைக்கதை எழுதி படத்தையும்தயாரிக்க முன் வந்தார். (எம்ஜிஆரிடம் அமைச்சராக இருந்த கே.ஏ.கிருஷ்ணசாமியின் தங்கை தான் இந்த ஜெயந்தி)ஆனால், இவருடன் ஜோடியாக நடிக்கத் தான் யாரும் முன் வரவில்லை. இந் நிலையில் தான் ஸ்ரீதேவிகாவிடம் போயிருக்கிறார்.தென்றலைப் பார்த்து முதலில் அதிர்ந்தவர், பெரிய சம்பளத்தைத் தரத் தயார் என்றதும் உடனே நடிக்க ஓகே சொல்லிவிட்டாராம்.இப்போது இந்தப் படம் தயாராகிவிட்ட நிலையில் வாங்கத்தான் ஆளில்லை. இதை முன்பே அறிந்ததாலோ என்னவோ, இந்தப்படத்தின் ரிலீஸ் பற்றியெல்லாம் எந்தவித கவலையும் இல்லாமல் கன்னடத்துக்குப் போய்விட்டார். அங்கும் தென்றல்கள் மாதிரியான ஹீரோக்களுடன் நடித்துக் கொண்டிருக்கிறார். கன்னடத்தில் உருவாரும் ஆட்டோகிராப்படத்தில் கோபிகா கேரக்டரை இவர் தான் செய்யப் போகிறாராம். (ஸ்னேகா கேரக்டரை செய்யப் போவது மீனா). கூடவே சொந்தமொழியான மலையாளத்தையும் விடவில்லை ஸ்ரீதேவிகா.எந்த மொழியில் நடிக்கப் போனாலும் கண் எல்லாம் தமிழ், தெலுங்கில் தான் இருக்கிறதாம். தமிழ் இன்னும் கைகொடுக்காதநிலையில் தெலுங்கில் இவர் எடுத்த முயற்சிகளுக்கு பலன் கிடைக்க ஆரம்பித்திருக்கிறதாம்.நான் தாண்ட போலீஸ் டாக்டர் ராஜசேகருக்கு ஜோடியாக நடிக்க தெலுங்கில் இருந்து அழைப்பு வந்துள்ளதாம். விரைவில்தெலுங்கில் ஹீரோயினாக எண்ட்ரி கொடுக்கப் போகிறார் ஸ்ரீதேவிகா.இதற்கிடையே இவருடன் அன்பே வாவில் நடித்த தென்றல் அடுத்து ஒரு படத்தை தயாரிக்கப் போகிறாராம்.

Subscribe to Oneindia Tamil
தமிழில் வாய்ப்புக்கள் இல்லாமல் போனதால் கன்னடம், மலையாளம் என ரூட்டை மாற்றிக் கொண்டுவிட்டார் ஸ்ரீதேவிகா.

மலையாளத்து மங்கையான ஸ்ரீதேவிகாவிடம் கோலிவுட் விரும்பும் சாமாச்சாரங்கள் எல்லாமே நிறைய இருந்தாலும் அவர்நடித்த படங்கள் ஏதும் பெரிய அளவில் ஓடாததால் இன்னும் கண்டுகொள்ளப்படாமலேயே இருக்கிறார்.

இத்தனைக்கும் இயக்குனர், தயாரிப்பாளர்கள் விரும்பும் வகையில் விட்டுக் கொடுத்து நடந்து கொள்ளவும் செய்கிறார்.கவர்ச்சியிலும் களமிறங்கிவிட்டார், ஆனாலும் அவருக்கு இன்னும் ஒரு பிரேக் கிடைத்தபாடில்லை.

அதனால் வரும் வாய்ப்புக்களை எல்லாம் கதை கூட கேட்காமல் வெறும் சம்பளத்தை மட்டும் பேசிவிட்டு அள்ளிப் போட்டுக்கொள்கிறார்.

அந்த வகையில் தான் அன்பே வா என்று ஒரு படம் கிடைத்தது. அதில் ஹீரோவாக நடிக்கும் தென்றல் என்பவருக்கு வீட்டில்ஏகப்பட்ட பணம். பல தலைமுறையாக கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டிருக்கும் குடும்பம்.

ஆனால், தென்றலுக்கு சினிமா மோகம். இதனால் சுமார் 60 லட்சத்தை எடுத்துக் கொண்டு தானே ஹீரோவாக நடித்து படம் எடுக்கவந்துவிட்டார் கோலிவுட்டுக்கு. மகனுக்காக தாயார் ஜெயந்தி கிருஷ்ணமூர்த்தியே கதை, திரைக்கதை எழுதி படத்தையும்தயாரிக்க முன் வந்தார். (எம்ஜிஆரிடம் அமைச்சராக இருந்த கே.ஏ.கிருஷ்ணசாமியின் தங்கை தான் இந்த ஜெயந்தி)

ஆனால், இவருடன் ஜோடியாக நடிக்கத் தான் யாரும் முன் வரவில்லை. இந் நிலையில் தான் ஸ்ரீதேவிகாவிடம் போயிருக்கிறார்.தென்றலைப் பார்த்து முதலில் அதிர்ந்தவர், பெரிய சம்பளத்தைத் தரத் தயார் என்றதும் உடனே நடிக்க ஓகே சொல்லிவிட்டாராம்.

இப்போது இந்தப் படம் தயாராகிவிட்ட நிலையில் வாங்கத்தான் ஆளில்லை. இதை முன்பே அறிந்ததாலோ என்னவோ, இந்தப்படத்தின் ரிலீஸ் பற்றியெல்லாம் எந்தவித கவலையும் இல்லாமல் கன்னடத்துக்குப் போய்விட்டார்.

அங்கும் தென்றல்கள் மாதிரியான ஹீரோக்களுடன் நடித்துக் கொண்டிருக்கிறார். கன்னடத்தில் உருவாரும் ஆட்டோகிராப்படத்தில் கோபிகா கேரக்டரை இவர் தான் செய்யப் போகிறாராம். (ஸ்னேகா கேரக்டரை செய்யப் போவது மீனா). கூடவே சொந்தமொழியான மலையாளத்தையும் விடவில்லை ஸ்ரீதேவிகா.

எந்த மொழியில் நடிக்கப் போனாலும் கண் எல்லாம் தமிழ், தெலுங்கில் தான் இருக்கிறதாம். தமிழ் இன்னும் கைகொடுக்காதநிலையில் தெலுங்கில் இவர் எடுத்த முயற்சிகளுக்கு பலன் கிடைக்க ஆரம்பித்திருக்கிறதாம்.

நான் தாண்ட போலீஸ் டாக்டர் ராஜசேகருக்கு ஜோடியாக நடிக்க தெலுங்கில் இருந்து அழைப்பு வந்துள்ளதாம். விரைவில்தெலுங்கில் ஹீரோயினாக எண்ட்ரி கொடுக்கப் போகிறார் ஸ்ரீதேவிகா.

இதற்கிடையே இவருடன் அன்பே வாவில் நடித்த தென்றல் அடுத்து ஒரு படத்தை தயாரிக்கப் போகிறாராம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil