»   »  நீ தட்டிப் பறிச்சா.. நான் எட்டிப் பிடிப்பேன்.. கவர்ச்சிப் போட்டியில் குதித்த ஸ்ரீதிவ்யா, கீர்த்தி

நீ தட்டிப் பறிச்சா.. நான் எட்டிப் பிடிப்பேன்.. கவர்ச்சிப் போட்டியில் குதித்த ஸ்ரீதிவ்யா, கீர்த்தி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: யார் அதிகமாகக் கவர்ச்சி காட்டி நடிப்பது என்பதில் தமிழின் இளம் நாயகிகளான கீர்த்தி சுரேஷ், ஸ்ரீதிவ்யா இடையே கடுமையான போட்டி உருவாகியிருக்கிறதாம்.

வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் மூலம் தமிழ்நாட்டின் வாலிபர்கள் மனதில் நிரந்தர இடத்தைப் பிடித்த ஸ்ரீதிவ்யாவிற்கு, அடுத்தடுத்த படங்கள் சொல்லிக் கொள்ளும்படியாக அமையவில்லை.

Sridivya - Keerthi Suresh Heavy Competition Being Glamorous

இந்நிலையில் ரஜினிமுருகன் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமான கீர்த்தி சுரேஷ், ஸ்ரீதிவ்யாவிற்கு வரவேண்டிய 2 பட வாய்ப்புகளை தட்டிப் பறித்து விட்டாராம்.

ஸ்ரீதிவ்யாவை விட அதிக கவர்ச்சி காட்டி நடிக்க நான் தயார்'' என்று கூறி, அந்தப் பட வாய்ப்புகளை கீர்த்தி சுரேஷ் பிடித்ததாக கூறப்படுகிறது.

இதைக் கேள்விப்பட்டதும், ‘‘கீர்த்தி சுரேசை விட அதிக கவர்ச்சியாக நடிக்க நான் தயார்'' என்று ஸ்ரீதிவ்யா அறிவித்து இருக்கிறாராம். இதனைக் கேள்விப்பட்ட திரையுலகினர் சபாஷ் சரியான போட்டி என்று இருவரின் போட்டியையும் ரசிக்கத் தயாராகி வருகிறார்களாம்.

ரஜினிமுருகன் வெளிவராத நிலையிலும் கூட கீர்த்தி சுரேஷின் கைகளில் ஏராளமான பட வாய்ப்புகள் இருக்கின்றன. இதனால் தான் மணிரத்னம் படத்திலிருந்து கூட கீர்த்தி சுரேஷ் விலகினார் என்று கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

English summary
Tamil Cinema Young Actress Sridivya and Keerthi Suresh both Actress Heavy Competition in Being Glamorous. Keerthi Suresh Said "I am Ready to Act as More Glamorous than Sridivya". "I am Ready to Act More Glamorous than Keerthi Suresh" was Announced that Sridivya.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil