19 வயசு மகனை மடியில் தூக்கி வச்சு கொஞ்சும் பியூமி ஹன்சமாலி.. குவியும் மோசமான கமெண்ட்டுகள்!
சென்னை: இலங்கையை சேர்ந்த சிங்கள மாடல் நடிகை பியூமி ஹன்சமாலி ஆரம்பத்தில் இருந்தே மிகவும் மோசமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு இன்ஸ்டாகிராமில் வைரலானார். தனது கணவரை பிரிந்து மகன் கவினுடன் வாழ்ந்து வருகிறார். அவ்வப்போது மகனுடன் இருக்கும் சில புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில், சமீபத்தில், தனது மகனுக்கு 19 வயதாகி விட்டது. இதுவே நான் அவனை கடைசியாக தூக்குவது என தூக்கி வைத்துக் கொண்டு வெளியிட்ட வீடியோ சோஷியல் மீடியாவில் ஏகப்பட்ட விவாதங்களை கிளப்பி உள்ளது.

மகனையும் கெடுத்து விட்டார் பியூமி ஹன்சமாலி என மோசமான கமெண்ட்டுகளை குவித்து வருகின்றனர். அவருடைய மகன் தானே அதில் என்ன தப்பு என்றும் அவருக்கு ஆதரவான கமெண்ட்டுகளும் குவிந்து வருகின்றன.
18 பிளஸ் கன்டென்ட்: சிங்கள மாடல் அழகியாக சில டைட்டில்களை அழகிப் போட்டிகளில் வென்றவர் தான் பியூமி ஹன்சமாலி. மேலும், தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடிக்கப் போகிறேன் என இந்திய ரசிகர்களையும் தனது இன்ஸ்டாகிராம் ஃபாலோயர்களாக மாற்றினார். அடிக்கடி பாத்ரூமில் வெறும் டவல் கட்டிக் கொண்டு 18 பிளஸ் அடல்ட் கன்டென்ட்டுகளை பதிவிட்டு இணையத்தை சூடாக்கி வந்தார். வயதானாலும் இன்னமும் கவர்ச்சி குறையாமல் அதே போன்ற வீடியோக்களையும் போட்டோக்களையும் பதிவிட்டு வருகிறார். கணவருடன் விவாகரத்து என்றும் புதிதாக வாரத்துக்கு ஒரு பாய் ஃபிரெண்ட் என்றும் வாழ்ந்து வந்த பியூமி ஹன்சமாலி சில மோசடி விவகாரங்களிலும் சிக்கியது சர்ச்சையை கிளப்பியது.
19 வயசு மகனை இடுப்பில் தூக்கி: சில காலம் சைலன்ட்டாக இருந்து வந்த பியூமி ஹன்சமாலி மீண்டும் வீடியோக்களையும் போட்டோக்களையும் ஷேர் செய்யத் தொடங்கினார். இவரது பெயரில் சில போலி ஐடிக்களும் எக்ஸ் தளத்தில் உலாவி வருகின்றன. இந்நிலையில், சமீபத்தில், தனது 19 வயது மகனை இடுப்பில் தூக்கி வைத்துக் கொஞ்சும் வீடியோ ஒன்றை வெளியிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.
மோசமான கமெண்ட்டுகள்: "அம்மா என்கிற பெயருக்கே களங்கம் ஏற்படுத்தும் விதமாக பியூமி ஹன்சமாலி இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார் என்று அவரை நெட்டிசன்கள் திட்டி வருகின்றனர். சப்ஸ்கிரைப் ஆப்ஷனை வைத்து மோசமான வீடியோக்களை வெளியிட்டு வருகிறார் என்றும் வயதுக்கு வந்த மகனை இப்படியா ஒரு அம்மாக்காரி தூக்குவா என கழுவி ஊற்றி வருகின்றனர். அவருடைய மகன் தானே அவர் எப்படி தூக்கினால் என்ன? என்றும் அதிலேயே அவர் கடைசியாக ஒரு முறை தூக்கப் போறேன் எனச் சொல்லித்தானே வீடியோ வெளியிட்டுள்ளார் என்று சிலர் சப்போர்ட்டும் செய்து வருகின்றனர். ஆனால், பியூமி அணிந்திருந்த கவர்ச்சி உடை தான் இந்த வீடியோவை ஆபாசமாக காட்டுகிறது என்றும் கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன.


Click it and Unblock the Notifications











