அஜித் குமாரின் அடுத்த படம்.. அட ஹீரோயின் இவங்களா? சீக்கிரமே அப்டேட் தெறிக்கவிடப்போகுது!
சென்னை: இந்த ஆண்டு இதுவரை வெளியான படங்களிலேயே தமிழ் சினிமாவில் அதிக வசூலை ஈட்டிய படம் என்றால் அது அஜித் குமார் நடிப்பில் வெளியான குட் பேட் அக்லி திரைப்படம் தான். சுமார் 250 கோடி வரை அந்த படம் வசூல் ஈட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சிவகார்த்திகேயனின் அமரன் படத்தை முறியடிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பிரதீப் ரங்கநாதனின் டிராகன் படத்தின் வசூலை முறியடித்துள்ளது.
குட் பேட் அக்லி படத்துக்குப் பிறகு சூர்யாவின் ரெட்ரோ தான் 200 கோடிக்கும் மேல் லாபத்தை ஈட்டிய படம் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த ஆண்டு அஜித் குமார் நடித்த விடாமுயற்சி திரைப்படம் தோல்வியை தழுவிய நிலையில், ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்திய படமாக குட் பேட் அக்லி மாறியது.

ஆனால், அந்த படமும் தயாரிப்பாளரை சந்தோஷத்தில் ஆழ்த்தவில்லை என சினிமா வட்டாரத்தில் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. அதன் காரணமாக அஜித் குமாரை வைத்து மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் தான் படம் எடுக்கப் போகிறார் என்றும் ஆனால், மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்காது என தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஐசரி கணேஷ் தயாரிப்பில் அஜித் குமார்: சிம்புவை வைத்து வெந்து தணிந்தது காடு படத்தை தயாரித்த ஐசரி கணேஷ், ரவி மோகனை வைத்து ஜீனி படத்தை தயாரித்து வருகிறார். அடுத்ததாக அவர் அஜித் குமாரை வைத்து படம் தயாரிக்கப் போகிறார் என்றும் அந்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் தான் இயக்கப் போகிறார் என்றும் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. கூடிய சீக்கிரமே படத்திற்கு பூஜை போட்டு பணிகளையும் ஆரம்பித்துவிடுவார்கள் என்கின்றனர்.
கேஜிஎஃப் ஹீரோயின்: அஜித் குமாருக்கு ஜோடியாக இந்த ஆண்டு வெளியான விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி என இரு படங்களிலுமே நடிகை த்ரிஷா தான் நடித்திருந்தார். இந்நிலையில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் குமார் நடிக்கப் போகும் புதிய படத்திற்கான ஹீரோயின் தேடலில் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் ஈடுபட்டு வருகிறார் என்றும் அவருடைய சாய்ஸ் கேஜிஎஃப் மற்றும் ஹிட் 3 படங்களில் நடித்த ஸ்ரீநிதி ஷெட்டி தான் என தகவல்கள் வெளியாகி உள்ளன. ரொமான்ஸ் காட்சிகளிலும், ஆக்ஷன் காட்சிகளிலும் மெச்சூரான காட்சிகளிலும் சிறப்பாகவே நடித்து வரும் ஸ்ரீநிதி ஷெட்டி அஜித்துக்கு செம ஜோடியாகவே இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கார் ரேஸுக்கு இடையே: இந்த ஆண்டு நவம்பர் மாதம் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு பிப்ரவரி மாதத்துக்குள் அஜித் குமாரின் போர்ஷனை முடித்து விடவும் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன் பின்னர், அஜித் குமார் அடுத்த கார் பந்தயத்துக்காக சென்றுவிடுவார் என்றும் அடுத்த ஆண்டு மே அல்லது ஜூன் மாதம் படமே ரிலீஸுக்கு ரெடியாகி விடும் என்கிற வேகத்தில் அனைத்தையும் திட்டமிட்டு ஆதிக் ரவிச்சந்திரன் செய்து வருகிறார் என்கின்றனர். குட் பேட் அக்லி படத்தையே அவர் குறுகிய காலத்தில் அஜித் குமாரை இத்தனை கெட்டப்புகளில் காட்டி ரசிகர்களுக்கும் ஏகப்பட்ட ரெஃபரன்ஸ் வச்சு ஒரு மெகா விருந்தையே திரையரங்குகளில் கொடுத்திருந்தார். அதே போல சரவெடியாக இன்னொரு அஜித் படம் வெளியானால் 300 முதல் 500 கோடி வரை வசூல் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











