ரஜினியுடன் படம் எடுத்துக் கொண்ட அவரது முன்னாள் நாயகிகள்!

By Shankar

வயதாக ஆக இளமை கூடிக் கொண்டே போகும் அதிசயம் வரம் வாங்கி வந்தவர் என்றால் அவர் ரஜினியாகத்தான் இருக்க முடியும்.

லிங்காவில் அவரது தோற்றத்தைப் பார்க்கும் யாரும் அவருக்கு என்ன வயதிருக்கும் என்று கணிப்பதில் குழம்பிப் போவார்கள்.

அத்தனை இளமையாகவும், ஸ்டைலாகவும் காட்சி தருகிறார் ரஜினி. குறிப்பாக அந்த முதல் தோற்ற போஸ்டர்கள் வெளியான போது, இன்றைய இளம் ஹீரோக்கள் அல்லது அவரது இடத்தைக் குறிவைத்து காய் நகர்த்தும் அத்தனை பேரும் அதிர்ந்து நின்றார்கள்.

நாயகிகள்

நாயகிகள்

எழுபதுகளில் ஆரம்பித்தது ரஜினியின் திரைப்பயணம். இதோ.. நாற்பது ஆண்டுகள் ஓடிவிட்டன. இத்தனை ஆண்டுகளில் எத்தனையோ நாயகிகள் அவருடன் ஜோடி சேர்ந்துவிட்டனர்.

ஹீரோயினே அம்மாவாகவும் நடித்த கதை

ஹீரோயினே அம்மாவாகவும் நடித்த கதை

ரஜினிக்கு ஆரம்ப நாட்களில் ஜோடியாக நடித்த நடிகைகளே.. பின்னாளில் அம்மாவாக மாறிய கதையும் நடந்தது. எழுபதுகளில் ஜோடி சேர்ந்த ஸ்ரீவித்யா, சுஜாதா, எண்பதுகளில் ஜோடி சேர்ந்த அம்பிகா... இப்படி அது ஒரு பட்டியல் போகிறது.

மீனா

மீனா

ஒரு விழாவில் பேசும்போது, என்னுடன் ஜோடியாக நடித்த நடிகைகளே பின்னாளில் அம்மாவாகவும் நடித்துள்ளார்கள். அந்த வகையில் மீனாவும் சேரக்கூடும் என ரஜினியே சொல்ல, மீனா வெட்கப்பட்டு, 'நான் மாட்டேன்' என்றார். ஆனால் இன்றோ, அப்படி ஒரு வாய்ப்பு வந்தால் தாராளமாக நடிப்பேன் என்று அறிவித்துள்ளார்.

ஸ்ரீப்ரியா

ஸ்ரீப்ரியா

ஆனால் ஸ்ரீப்ரியா மட்டும் அப்படி நடிக்க ஒப்புக் கொள்ளவில்லை. அன்றைய நாட்களில் ரஜினியுடன் அதிகப் படங்களில் நடித்த நடிகைகளில் ஸ்ரீதேவிக்கு அடுத்த இடம் ஸ்ரீப்ரியாவுக்குத்தான்.

லிங்கா படப்பிடிப்பில்

லிங்கா படப்பிடிப்பில்

சமீபத்தில் இந்த இரு நடிகைகளும் ரஜினியை லிங்கா படப்பிடிப்பில் சந்தித்துப் பேசினர். தங்களது எவர்கிரீன் ஹீரோவுடன் இருவரும் இணைந்து நின்று படம் எடுத்துக் கொண்டனர். ரஜினியுடன் தங்களது மலரும் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டனர்.

வாழ்த்து

வாழ்த்து

இருவருக்கும் ரஜினி தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார். வாழ்த்து எதற்கு என்கிறீர்களா? ஸ்ரீப்ரியா இயக்கத்தில் மீனா - வெங்கடேஷ் நடித்த த்ரிஷ்யம் படத்தின் தெலுங்குப் பதிப்பு பெற்ற வெற்றிக்குத்தான்!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X