»   »  தமிழ்நாட்டை இனி மக்கள்தான் காப்பாற்ற வேண்டும்! - ஸ்ரீப்ரியா

தமிழ்நாட்டை இனி மக்கள்தான் காப்பாற்ற வேண்டும்! - ஸ்ரீப்ரியா

Posted By:
Subscribe to Oneindia Tamil
தமிழ் நாட்டை இனி மக்கள் அனைவரும் அவரவர் தொகுதி எம்எல்ஏக்களுடன் பேசி காப்பற்ற வேண்டும் என்று நடிகை ஸ்ரீபிரியா கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் சசிகலா ஆதரவாளர்களின் ஆட்சி அமைந்துள்ளது. அவரது தீவிர விசுவாசி எடப்பாடி பழனிச்சாமி முதல்வராகப் பதவியேற்றுக்கொண்டுள்ளார்.

Sripriya opposes Edapadi Palanisamy as CM

இந்நிலையில், பலரும் பழனிச்சாமியின் பதவியேற்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நடிகை ஸ்ரீபிரியாவும் தனது ட்விட்டர் பக்க பதிவில் கருத்து தெரிவித்துள்ளார்.

அதில், "எம்எல்ஏக்கள் வாக்கு கேட்டுவரும் போது பதவிக்காக கைகளை கட்டிக்கொண்டு வாக்கு கேட்கின்றனர். தற்போது மக்கள் தங்களின் கடமையைச் செய்ய வேண்டிய நேரம். மக்கள் அனைவரும் அவரவர் தொகுதி எம்எல்ஏக்களுடன் பேசி தமிழ் நாட்டை காப்பாற்ற வேண்டும்," என்று கூறியுள்ளார்.

மேலும், தேசிய ஊடகங்கள் தமிழ்நாட்டில் அரசியல் பிரச்னைகள் முடிந்துவிட்டன என்று கூறிவருகின்றன. ஆனால், இப்போதுதான் தொடங்கியுள்ளது என அவர்களுக்கு தெரியவில்லை. மக்கள் தங்களுக்கு யார் எம்எல்ஏவாக வர வேண்டும் என்று முடிவு செய்ய வேண்டும் என்றும் கருத்து தெரிவித்துள்ளார்.

English summary
Actress Sripriya says that the state of Tamil Nadu in real crisis and people have to save the state.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil