கையேந்திபவனில் தோசை சாப்பிட்ட ஸ்ரீரெட்டி
Recommended Video

சென்னை: நடிகை ஸ்ரீரெட்டி கையேந்தி பவனில் தோசை சாப்பிட்ட அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார்.
இப்போது வரும் மீடூ புகார்களெல்லாம் எந்த மூலைக்கு? நீ படிச்ச ஸ்க்கூல்ல நான் ஹெட் மாஸ்டர்டா என்று சொல்லும் ரேஞ்சுக்கு பரபரப்பான பாலியல் குற்றச்சாட்டுக்களை சொன்னவர் நடிகை ஸ்ரீரெட்டி.

தற்போது சென்னைக்கு இடம் பெயர்ந்துவிட்டார். கேகே நகரில் வசிப்பதாக சொல்லப்படுகிறது. வீதிகளில் இறங்கி ஜாலி உலா வந்த ஸ்ரீரெட்டி, ஒரு கையேந்திபவனில் தோசை சாப்பிட்ட அனுபவத்தை ஃபேஸ்புக்கில் பகிர்ந்துள்ளார்.
கையேந்திபவனில் சாப்பிட்ட தோசை மிக டேஸ்ட்டாக இருந்ததாகவும், அதுபோன்ற ஒரு சுவையான தோசை ஐந்து மற்றும் ஏழு நட்சத்திர ஹோட்டல்களில் கூட கிடைக்காது எனவும் பதிவிட்டுள்ளார்.
தோசை சுட்டப் பெண்ணுடன் போட்டோ எடுத்து, நீங்கள் ருசியான தோசை கொடுத்தீர்கள், என் பசியை போக்கினீர்கள், அளவுக்கதிகமான அன்போடு பரிமாறினீர்கள், இந்த சுவையையும் உணர்வையும் என்னால் காசு கொடுத்து வாங்க முடியாது என புல்லரித்துப்போகியுள்ளார்.
ஸ்ரீரெட்டி தற்போது ரெட்டி டைரி என்ற படத்தில் நடித்து வருகிறார். அவருடைய வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு இப்படம் தயாராகி வருகிறது. இப்படத்தை சித்திரை செல்வன் இயக்கி வருகிறார்.


Click it and Unblock the Notifications











