»   »  ஒரு நொடியில்... கவர்ச்சிக்கு மாறிய சிருஷ்டி டாங்கே.. இதயத் துடிப்பை எகிற வைக்கும் தபஸ்ரீ!

ஒரு நொடியில்... கவர்ச்சிக்கு மாறிய சிருஷ்டி டாங்கே.. இதயத் துடிப்பை எகிற வைக்கும் தபஸ்ரீ!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மேகா படத்தில் குடும்ப குத்துவிளக்காக வந்த பெண்ணா இது என வாய் பிளக்க வைத்தன 'ஒரு நொடியில்' படத்துக்காக சிருஷ்டி டாங்கே கொடுத்திருந்த அதிரடி கவர்ச்சி போஸ்கள்.

இப்படி பக்கத்து வீட்டுப் பெண் போன்ற தோற்றத்திலேயே இருந்தால் காணாமல் போய்விடுவோம் என்று நினைத்தாரோ என்னமோ... அதிரடி கவர்ச்சிக்கு தாவியிருக்கிறார்.

சிருஷ்டி டாங்கே

சிருஷ்டி டாங்கே

கடற்கரையில் ஈர உடையில் சில காட்சிகள்... மிகக் குறைந்த ஆடையில் சில காட்சிகள் என பஞ்சமில்லா கவர்ச்சி விருந்து வைத்திருக்கிறார் சிருஷ்டி.

தபஸ்ரீ

தபஸ்ரீ

இந்தப் படத்தில் இன்னொரு நாயகி தபஸ்ரீ. அவர் கொடுத்திருக்கும் போஸ்களைப் பார்த்தால், பலகீன இதயக்காரர்களுக்கு ஆபத்துதான். துள்ளத்துடிக்க கவர்ச்சி காட்ட வைத்திருக்கிறார்கள்.

கோடீஸ்வரராவ் தயாரிக்கும் ஒரு நொடியில் படத்துக்கு சாய் பர்வேஷ் இசையமைக்கிறார். சூர்யா பாடல்களை எழுதியுள்ளார்.

எம்ஏ சவுத்ரி

எம்ஏ சவுத்ரி

எழுதி இயக்குகிறார் எம்ஏ சவுத்ரி. படம் குறித்து அவர் கூறுகையில், "ஒரு கிராமம். அங்கே வெளி ஆட்களோ, போலீஸோ நுழைய முடியாது. மீறி நுழைபவர்கள் இறந்து போகிறார்கள்.

500 ஆண்டு கால பேய்

500 ஆண்டு கால பேய்

அதற்கு காரணமாக சொல்லப்பட்டது தான் விசித்திரமாக இருந்தது.
500 ஆண்டுகளுக்கு முன்னால் நிகழ்ந்த சம்பவம் ஒன்றின் ஆவி இன்னமும் இந்த ஊரில் பலரை காவு வாங்கிக் கொண்டிருக்கிறது என்று எல்லோரும் பயந்து கொண்டிருந்தார்கள். அது உண்மையா இல்லையா? என்பது கதை.

80 நிமிட கிராபிக்ஸ்

80 நிமிட கிராபிக்ஸ்

படத்தில் ஏறக்குறைய 80 நிமிடத்திற்கு மேல் கிராபிக்ஸ் காட்சிகள் உபயோகப் படுத்தப் பட்டிருக்கிறது. திகில் மற்றும் ஹாரர் படமாக "ஒரு நொடியில் " உருவாகி உள்ளது," என்றார்.

Read more about: tamil cinema, glamour
English summary
Srishti Dange know for her family looks and roles is now suddenly doing glamour role in Oru Nodiyil horror movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil