மாஸ்டர் ஹீரோயினை தொடர்ந்து பெட்டை பிடித்த பிரபல நடிகை.. ஷர்ட்டுடன் ஹாட் போஸ்.. செம க்யூட் போங்க!
சென்னை: மாளவிகா மோகனனை தொடர்ந்து பிரபல நடிகை ஒருவரும் படுக்கையை பிடித்துக்கொண்டு படுஹாயாக போஸ் கொடுத்துள்ளார்.
தமிழ் படங்களில் முதலில் சப்போர்ட்டிங் ரோலில் நடித்து பின்னர் ஹீரோயினாக வளர்ந்தவர் சிருஷ்டி டாங்கே. மிஷ்கினின் யுத்தம் செய் படத்தில் சிறு கதாப்பாத்திரத்தில் நடித்தார்.
பின்னர் மேகா படத்தில் லீடிங் ரோலில் நடித்தார். இந்தப் படத்தில் அவரது நடிப்பு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

கிசுகிசுக்கள்
இதனை தொடர்ந்து பல படங்களில் கமிட்டானார் சிருஷ்டி டாங்கே. விஜய் சேதுபதியுடன் தர்மத்துறை படத்திலும் அவரது நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. கடைசியாக சேரனுடன் ராஜாவுக்கு செக் என்ற படத்தில் நடித்தார் சிருஷ்டி டாங்கே. ஒரு பக்கம் படங்களில் பிஸியாக இருந்த போதும் இயக்குநர் ஒருவருடன் அவரை தொடர்பு படுத்தி கிசுகிசுக்கள் பறந்தன.

போட்டோ ஷுட்
அதன்பிறகு சொல்லிக்கொள்ளும் அளவுக்கு சிருஷ்டி டாங்கேவுக்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால் விதவிதமான போட்டோ ஷுட்டில் இறங்கியிருக்கிறார் நடிகை சிருஷ்டி டாங்கே. கடற்கரை ஓரம், மொட்டை மாடி, வீட்டுக்குள் என கலக்கலாக போட்டோ ஷுட் நடத்தி வருகிறார்.

மாஸ்டர் நாயகி
வாய்ப்புக்காக அதிரடி ஆடை குறைப்பிலும் ஈடுபட்டு வருகிறார் சிருஷ்டி டாங்கே. இந்நிலையில் தனது டிவிட்டர் பக்கத்தில் அவர் ஷேர் செய்திருக்கும் போட்டோவை பார்த்த நெட்டிசன்கள், வாயை பிறந்துள்ளனர். மாஸ்டர் பட ஹீரோயினான மாளவிகா மோகனன், எப்போதும் பெட்டில் இருந்தப்படியே போட்டோ வெளியிட்டு வந்தார்.

பெட்டில் இருந்தப்படி
அவர் இப்போதுதான் பெட்டை விட்டு எழுந்து சற்று பால்கனி பக்கம் திரும்பினார். அந்த கேப்பில் அவர் இடத்தை பிடித்துக்கொண்டார் சிருஷ்டி டாங்கே. வெறும் சட்டையுடன் பெட்டில் இருந்தப்படி படு ஹாயாக போஸ் கொடுத்துள்ளார். அந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள், க்யூட், கூல் என ஜொள்ளுவிட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications











