twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மண்டிக் கிடக்குது மண்ணு.. மண்டி போட்டு இருக்குது பொண்ணு.. கன்னக் குழி அழகு.. அதைப் பார்த்து நீ பழகு!

    |

    சென்னை: எல்லாம் இருந்தும் என்னய்யா புண்ணியம்.. பிரயோஜனம்.. ஒன்னும் வரலையே.. இது நாகேஷ் ஒரு படத்தில் ஒரு நடிகையைப் பார்த்து சொல்லும் வசனம். சிருஷ்டி டாங்கேவுக்கும் இது பொருந்தும். நல்ல அழகு.. நடிக்கவும் தெரியும்.. ஆனால் வாய்ப்புகள்தான் வாசல் படி தொடவில்லை.

    Recommended Video

    Anitha Sampath Fake account in Twitter |Police Complaint against Vani Bhojan

    யுத்தம் செய், மேகா, டார்லிங் என அடுத்தடுத்து தலை காட்டி வந்தார் சிருஷ்டி. மேகாவில் அவரது அழகு பேசப்பட்டது. டார்லிங்கில் நடிப்பு பேசப்பட்டது. தர்மதுரை படத்தில் சின்ன ரோலில் வந்தாலும் மனதை உரசிக் கொண்டு போனார்.

    இன்று பெரிய அளவில் அவரிடம் படங்கள் இல்லை. கையில் இருப்பதோ ராஜாவுக்கு செக் மட்டுமே.. ஆனால் இந்த அழகு ராணியை நோக்கி தயாரிப்பாளர்கள் அதிக அளவில் "செக்"கை நீட்டாமல் இருப்பதுதான் ஏன் என்று தெரியவில்லை.. சரி வாங்க.. பீச்சுக்குப் போய் சிருஷ்டியைப் பார்த்து அவரிடமே கேட்டு வரலாம்...!

     பார்த்து நீ பழகு

    பார்த்து நீ பழகு

    மண்டிக் கிடக்குது மண்ணு
    மண்டி போட்டு இருக்குது பொண்ணு
    கன்னக் குழி அழகு
    அதைப் பார்த்து நீ பழகு
    தூரத்தில் மட்டுமா அலை
    மனசிலும் கூட அலை அலை
    பறந்து விரிகிறது கூந்தல்
    கூந்தலுக்குள் புகுந்து கலைக்கிறது காற்று

     காண வேண்டுமே கண்ணாயிரம்

    காண வேண்டுமே கண்ணாயிரம்

    உன் பார்வையில் ஓராயிரம்
    அதைக் காண வேண்டுமே கண்ணாயிரம்
    இதழ் சிந்தும் புன்னகைதான் பேராயுதம்
    வழி பார்த்து தடுமாறி விழத் தாங்கும்.. உன் கன்னக் குழி
    பூமியில் கை பதித்து நெஞ்சில் கால் பதித்தாய்
    மடங்கிய கால்களுக்குள் முடங்கியது மனசு
    மெல்ல எழுந்து நடந்து போ.. போதும் உன் ரவுசு!

     கைது செய்து கரையில் புதைப்பேன்

    கைது செய்து கரையில் புதைப்பேன்

    அலைந்து திரியும் உன் கூந்தல் கலைத்தது யார்
    காற்றைக் கைது செய்து கரையில் புதைப்பேன்
    என் வீட்டுத் தோட்டம் அதில்..
    எவன் வந்து ஆட்சி செய்வது
    விரலால் மணல் தடவி
    விளையாடும் கோகிலமே
    அது மணல் எல்ல.. என் மனசு..
    மெல்ல கோது.. உன் விரல் வலிக்காமல்
    மடங்கி கிடக்கும் உன் நிழல்... மணல் வெளியில்
    நீயோ விழுந்து கிடப்பது என் மன வெளியில்!

     அப்படியே இரு

    அப்படியே இரு

    அப்படியே இரு திரும்பி விடாதே
    அலைகள் கரைந்து போய் விடும்
    உன் அழகில் வெட்கி
    திரும்பிப் போய் விடும்
    அப்படியே சிரித்திரு
    உன் நெற்றி புரளும் சிறு மயிர்க் கீற்றில்
    மடங்கிக் கிடக்கட்டும் என் மனசு
    அலைந்து படபடக்கும் கூந்தல் கூட்டத்தில்
    சிக்கித் தவிக்கட்டும் என் மனசு
    நிஜம் விட்டு நீ சற்று நீங்கினாலும்
    உன் நிழல் கூட ஓவியமாய்
    நீண்டு கிடக்கும் இந்த மணல் வெளியில்.
    காற்று வாங்க வந்த என்னை
    உன் கவிதை வாங்க வைத்து விட்டாயே!

    (போதும்.. போதும்.. லிஸ்ட்டு ரொம்ப பெருஸ்ஸா போய்ட்டிருக்கு!)

    English summary
    Actress Srushti Dange is a talented star but without any big offers in Tamil Cinema, here is a look of her latest photoshoot.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X