கன்னக் குழி அழகியின் கலகல புகைப்படங்கள்.. கலக்கும் சிருஷ்டி!
Recommended Video
சென்னை: சிருஷ்டி டாங்கே என்றால் பலருக்கு நினைவில் வருவது அவரின் கன்னத்தில் விழும் குழி தான். இதற்காகவே அவருக்கு நிறைய ரசிகர்கள் உள்ளனர்.
மிஷ்கின் படமான யுத்தம்செய் படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து இருப்பார். அதற்கு பின் தெலுங்கில் துணை நடிகையாக கால் பதித்தார் சிருஷ்டி.

அவரை தமிழ் ரசிகர்கள் அனைவருக்கும் தெரியப்படுத்திய திரைப்படம் "மேகா" படம் சுமார் ஆகவே இருந்தது. ஆனால் இவரின் நடிப்பு கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டது. இதில் வரும் புத்தம் புது காலை பாடல் இன்றளவும் தமிழ் திரையுலக ரசிகர்கள் வீடுகளில் ஒலித்து கொண்டு இருக்கிறது. அந்த பாடலில் சிருஷ்டி நடை உடை பாவனை அனைத்து ரசிக்கும் படி இருந்தது.

பின் ஜி.வி.பிரகாஷ் உடன் இணைந்து டார்லிங் என்ற படத்தில் நடித்தார். இப்படத்திலும் இவரின் நடிப்பு பேசப்பட்டது, 2015 முதல் 2017 வரை நிறைய படங்களில் நடித்தார் சிருஷ்டி. இவருக்கு திருப்பு முனையாக அமைந்த திரைப்படம் தர்மதுரை. தற்பொழுதும் கூட தமிழ் படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார் சிருஷ்டி.

தனது கன்னத்தில் விழும் குழியால் ரசிகர்களை மயக்கிய சிருஷ்டி தற்போது கவர்ச்சியான புகைபடங்கள் மூலம் ரசிகர்களை மயக்குகிறார்.

கடற்கரையோரம் குட்டை உடையில் மணலில் அமர்ந்தபடி போஸ் கொடுத்துள்ளார் சிருஷ்டி. இதனை பார்க்கும் ரசிகர்கள் நிறைய லைக்ஸ்களும் மற்றும் கமெண்ட்ஸ்களும் பதிவிட்டு வருகின்றனர்.



Click it and Unblock the Notifications











