Don't Miss!
- Finance
தொழில்நுட்ப கோளாறு எதிரொலி.. ஜிஎஸ்டி தாக்கல் செய்ய காலக்கெடு நீட்டிப்பு!
- News
எல்லாம் நடிப்பா கோபால்ல்ல்? "கல்ப சமாதி" நிலைக்கு போன நித்தியானந்தா! பின்னணியில் ஆபரேஷன் கைலாஸா?
- Lifestyle
தேனில் பெருங்காயத் தூளை கலந்து சாப்பிடுவதால் உடலினுள் நிகழும் அற்புதங்கள் குறித்து தெரியுமா?
- Sports
புதிய தலைமை பயிற்சியாளராக லக்ஷ்மண் நியமனம்.. இந்திய அணியில் அதிரடி திருப்பம்.. காரணம் என்ன?
- Automobiles
டாடா விற்கு தலைவலியை உருவாக்கும் ஹூண்டாய்... அடுத்த வருசம் இருக்குது பெரிய வேட்டை...
- Technology
மழையாக பொழிந்த மர்ம உலோக பந்து- பதற்றத்தில் குஜராத் கிராம வாசிகள்: சம்பவ இடத்துக்கு வந்த ஆராய்ச்சி குழு!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
பச்சை புடவையில் பளபளக்கும் கன்னக்குழி அழகி ஸ்ருஷ்டி டாங்கே!
சென்னை: அழகிய கன்னக்குழி அழகு அசரவைக்கும் நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்து வருபவர் நடிகை ஸ்ருஷ்டி டாங்கே
தமிழில் மிக பிரபலமான நடிகையாக உள்ள இவர் இப்பொழுது ஸ்ரீகாந்துக்கு ஜோடியாக தி பெட் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்
கொஞ்சம் கொஞ்சமாக கவர்ச்சி கதாபாத்திரங்களிலும் நடிக்க தொடங்கியுள்ள இவர் இப்பொழுது பச்சை பட்டு புடவையில் பளபளக்கும் அழகிய புகைப்படங்களை வெளியிட்டு லைக்குகளை குவித்து வருகிறார்.
கண்ணைப்
பறிக்கும்
ரெட்ரோ
ஸ்டைலில்
அசத்தும்
நடிகை
அமலாபால்!

டார்லிங்
பெரிய அளவில் ஹிட் படங்களில் நடிக்கவில்லை என்றாலும் மிக சிறிய படங்களில் நடித்தும் இப்போது தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகை என்ற இடத்தை பிடித்துள்ளார் நடிகை ஸ்ருஷ்டி டாங்கே. தனது கன்னக்குழி அழகு மூலம் தனித்துவமான நடிகையாக ரசிகர்களை கொள்ளையடித்து வரும் இவர் நடிப்பிலும் நடனத்திலும் மிகவும் திறமை வாய்ந்தவராக உள்ளார். மேகா, டார்லிங் உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமாக அறியப்பட்ட இவர் இயக்குனர் சரவணன் இயக்கத்தில் கத்துக்குட்டி என்ற படத்தில் மிகவும் சவாலான கதாபாத்திரத்தை ஏற்று நடித்து பாராட்டுக்களைப் பெற்றார்

சர்வைவர் நிகழ்ச்சியில்
பட வாய்ப்புகள் சரிவர இல்லை என்பதால் சின்னத்திரையிலும் கால் தடத்தை பதித்து வரும் ஸ்ருஷ்டி சர்வைவர் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். ஆளில்லாத தனித் தீவில் நடக்கும் இந்தப் போட்டியில் தொடர்ந்து நிலைப்பார் என எதிர்பார்க்கப்பட்ட சூழலில் முதல் ஆளாக போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டார். இப்பொழுது மீண்டும் படங்களில் நடிக்கத் தொடங்கி யுள்ள ஸ்ருஷ்டி ஸ்ரீகாந்துக்கு ஜோடியாக புதிய திரைப்படத்தில் நடித்து வருகிறார்

தி பெட்
வெத்துவேட்டு பட இயக்குனர் மணிபாரதி இயக்கத்தில் ஸ்ரீகாந்த் விஜய் டிவி பப்பு ஆகியோர் ஹீரோவாக நடித்து வரும் தி பெட் திரைப்படம் ஹாரர் த்ரில்லர் கதை களத்தில் உருவாகி வருகிறது . இப்படத்தின் டைட்டில் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி அமோக வரவேற்பை பெற்றது.

பார்க்கப் பார்க்க திகட்டாத
நடித்தால் கதாநாயகியாக மட்டும்தான் நடிப்பேன் என்றெல்லாம் இல்லாமல் சிறப்பு தோற்றம், இரண்டாவது கதாநாயகி என எந்த ரோல் கிடைத்தாலும் அதில் முழு மூச்சுடன் நடித்து வரும் ஸ்ருஷ்டி டாங்கே சமீப காலமாக கவர்ச்சியிலும் தாராளம் காட்டி வருகிறார். இந்த நிலையில் சமூக வலைதளங்களில் இவர் வெளியிடும் புகைப்படங்கள் தொடர்ந்து வைரலாகி வர இப்பொழுது அழகிய பச்சை பட்டு புடவையில் பார்க்கப் பார்க்க திகட்டாத அழகில் பளபளக்கும் அழகிய புகைப்படங்களை தற்போது வெளியிட்டுள்ளார். ஒரு புறம் எவ்வளவு கொடுத்தாலும் ஈடு இணையில்லாத கன்னக்குழி அழகு மறுபுறம் மயில் மூக்குத்தி என பார்க்கப் பார்க்க திகட்டாத இந்த ஃபெஸ்டிவல் மோட் பட்டுப்புடவை புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்து வருகிறது.