»   »  சைபர் குயின் ஸ்ருதா!

சைபர் குயின் ஸ்ருதா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

கொடைக்கானல் கொய்யாப் பழம் போல குளுகுளுவென இருக்கிறார் ஸ்ருதா கீர்த்தி.

பெங்களூரைச் சேர்ந்த இந்த சிலிக்கான் நாயகி நடித்த முதல் படமான காதலே என்காதலே சுமாராக ஓடிக் கொண்டிருக்கிறது.

ஸ்ருதாவுக்கு சின்ன வயதிலேயே நடிப்பில் ஆர்வம் இருந்தாலும் அதைப்பற்றி பெரியஅளவில் திட்டமிடாமல் அவர் பாட்டுக்கு படிப்பின் மீது கவனமாக இருந்தாராம்.

பேஷன் டெக்னாலஜியில் டிப்ளமோமுடித்தவுடன் மாடலிங்கில் குதித்திருக்கிறார்.மிஸ் இந்தியா போடடியில் பங்கேற்று 6வது இடத்தை தான் பிடிக்க முடிந்திருக்கிறது.

அந்தப்போட்டியில்தான் தனுஸ்ரீ தத்தா மிஸ் இந்தியா ஆனார். ஆனாலும் ஸ்ருதாவுக்குஆறுதல் தரும் வகையில், அந்தப் போட்டியில் இன்டர்நெட் மூலம் அதிக வாக்குகள்பெற்றதால் சைபர் குயீன் என்ற பட்டம் கிடைத்ததாம்.

அப்புறம் என்ன, ஏகப்பட்ட விளம்பரங்கள் தேடி வர அனைத்திலும் நடித்துபிரபலமானார். அதில் கிடைத்த அறிமுகத்தால் கன்னட, தமிழ்ப் பட வாய்ப்புகள் வந்துசேர்ந்ததாம். ஆனாலும்முதலில் அவர் நடித்தது தமிழ் படத்தில் தானாம்.

பொறந்தது பெங்களூர் என்றாலும் சென்னைக்கும், தனக்கும் 1999ம் ஆண்டிலிருந்தேதொடர்பு ஏற்பட்டு விட்டதாக சொல்கிறார் ஸ்ருதா. அந்த ஆண்டு சென்னையில் நடந்தமிஸ் டீன் சூப்பர் மாடல் போட்டியில பங்கேற்றிருக்கிறார்.

அந்தப் போட்டியில் த்ரிஷாவும் இருந்தாலும் வெற்றி என்னவோ ஸ்ருதாவுக்குத்தான்கிடைத்ததாம்.

ஸ்ருதாவுக்கு சென்னை பிடித்தாலும் கூவத்தை பிடிக்கவில்லையாம். உவ்வேஎன்கிறார். எனக்கு பிடிச்ச ஊர் பொள்ளாச்சிதான் என்கிறார் இந்த அழகான ஆச்சி.

சரி காதலே படத்துக்கு வாங்க என்று அவரை பின் நோக்கி இழுத்தோம்.

அந்தப் படத்தில் நடித்தது ரொம்ப நைஸ் எக்ஸ்பீரியன்ஸ். ரொம்ப நல்ல டீம்.தயாரிப்பாளர் ரமேஷ், இயக்குனர் சேகர் ஆகிய இருவரும் சகோதரர்கள்.இசையமைப்பாளர் பிரயோக் பெங்களூர்காரர்.

நல்ல் காதல் கதை. அதனால் தான் ஒத்துக் கொண்டேன். முதல் நாள் கொஞ்சம்பதட்டமாக இருந்தது. அப்புறம் தூள் கிளப்ப ஆரம்பித்து விட்டேன். வசனத்தைஆங்கிலத்தில் எழுதி வைத்துக் கொண்டு தமிழில் பேசினேன் (வாய் அசைத்ததை தான்இப்படிச் சொல்கிறார்)

அந்தப் படத்தில் நடித்த இன்னொரு நாயகியான ரோமாவும் எங்க ஊர் (பெங்களூர்)தான். இதனால் கன்னடத்தில் மாத்தாடி மாத்தாடியே தோஸ்த் ஆகிட்டோம்.

ஆரம்பத்தில் அம்மா சுசித்ரா ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு தினமும் என்னோடு வந்தார்.ஆனால் யூனிட் உள்ளவர்கள் எல்லாம் ரொம்ப நல்ல புள்ளைகளாக இருந்ததால்அப்புறம் தனியாகவே என்னை போக விட்டார்.

கிளாமராகவும், செக்ஸியாகவும் நடிப்பீங்களா என்று கேட்டால், ரொம்பவித்தியாசமான பதிலைத தந்தார் ஸ்ருதா. அதாவது மெண்டலுக்கும், ஜீனியஸுக்கும்இடையே உள்ள வித்தியாசம்தான் கிளாமருக்கும், செக்ஸிக்கும் இடையிலானவித்தியாசம் என்கிறார்.

வேண்டும் என்றே கிளாமரை திணிக்கக் கூடாது. அப்படி செய்தால அது செக்ஸி.அப்படிப்பட்ட பாதையில் போக நான் தயாராக இல்லை என்று கூறும் ஸ்ருதா, காதலைசொல்ல பல நல்ல வழிகள் உள்ளன. முத்தமிட்டுத்தான் காதலை சொல்ல வேண்டும்என்ற அவசியம் இல்லை.

ஒரு சேலைத் தீண்டலிலோ, பார்வை பரிமாற்றத்திலோ கூட நமது காதலை தெளிவாகசொல்லி விட முடியும். முத்தம், கித்தம் எல்லாம் வெஸ்டர்ன் கல்ச்சர் என்று வெட்டுமூணு, துண்டு ஆறாக பேசுகிறார்.

அதேபோல குத்தாட்டம் போடவும் ஸ்ருதா ரெடியாக இல்லையாம். மொத்தததில்,குத்து, முத்தம், சத்தம் இல்லாமல் படு சமர்த்தாக நடிக்கவே ஆசை என்கிறார் இந்தபெங்களூர் பாப்பா.

Read more about: srutha keerthi interview

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil