அர்ஜுன் விவகாரம்: போலீஸ் புகாரால் வசமாக சிக்கிய ஸ்ருதி ஹரிஹரன்

By Siva

Recommended Video

அர்ஜுன் விவகாரம்: வசமாக சிக்கிய ஸ்ருதி ஹரிஹரன்- வீடியோ

பெங்களூரு: அர்ஜுன் மீது புகார் கொடுத்த போது நடிகை ஸ்ருதி ஹரிஹரனின் ரகசியம் ஒன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

நிபுணன் படத்தில் நடித்தபோது அர்ஜுன் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அவர் மீது பெங்களூரு கப்பன் பார்க் காவல் நிலையத்தில் நடிகை ஸ்ருதி ஹரிஹரன் புகார் அளித்துள்ளார்.

அந்த புகார் மனு மூலம் அவர் பற்றிய ரகசியம் ஒன்று வெளியே வந்துள்ளது.

சினிமா

சினிமா

திருமணமாகிவிட்டால் நடிகைகளுக்கு மவுசு குறைந்து விடுகிறது. அதை மனதில் வைத்து ஸ்ருதி ஹரிஹரன் தன் வாழ்வில் நடந்த முக்கியமான விஷயத்தை ரகசியமாக வைத்திருந்திருக்கிறார். அவருக்கு ரகசியமாக திருமணம் நடந்துவிட்டது என்று கடந்த ஆண்டு கன்னட ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. ஆனால் அவரோ தான் சிங்கிள் என்றே சமாளித்தார்.

திருமணம்

திருமணம்

அர்ஜுன் மீது அளித்த புகார் மனுவில் ஸ்ருதி ஹரிஹரன் தனது கணவர் பெயர் ராம் குமார் என்று குறிப்பிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கெரியர் பாதிக்கப்படும் என்று பயந்து தனக்கு திருமணமானதை அவர் இத்தனை நாட்களாக மறைத்து வைத்திருந்தது தற்போது தெரிய வந்துள்ளது.

கோபம்

கோபம்

அர்ஜுனுக்கு எதிராக தன்னிடம் ஆதாரம் உள்ளது என்று ஸ்ருதி தெரிவித்துள்ளார். இருப்பினும் ஸ்ருதி மீது கன்னட திரையுலகை சேர்ந்த பலர் கோபத்தில் உள்ளனர். அவர் விளம்பரம் தேடவே இப்படி அர்ஜுன் மீது பழிபோடுவதாக அவர்கள் நினைக்கிறார்கள். இந்நிலையில் திருமண விஷயம் வேறு வெளியே வந்துள்ளது.

எத்தனை பொய்?

எத்தனை பொய்?

தனக்கு திருமணம் நடந்ததையே மறைத்து சிங்கிள் என்று பொய் சொன்ன ஸ்ருதி அர்ஜுன் விஷயத்தில் என்ன பொய் எல்லாம் சொல்லியிருப்பாரோ என்று கன்னட திரையுலகில் ஏற்கனவே பேச்சு கிளம்பிட்டது. தற்போது அவரின் பேச்சுக்கு மதிப்பு குறைந்துள்ளது. திருமணம் என்பது அவரின் தனிப்பட்ட விஷயம் என்பதையே பலரும் மறந்து அவரை விமர்சிக்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X