ஏலியன் கூட என்னமா டான்ஸ் ஆடுது நம்ம ஸ்ருதிஹாசன்!
சென்னை : காதலருடன் செம ஜாலியாக பொழுதை கழித்து அந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வைரல் ஆகி வருபவர் நடிகை ஸ்ருதிஹாசன்.
கேஜிஎஃப் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் சலார் திரைப்படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.
சோசியல் மீடியாக்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ஸ்ருதிஹாசன் இப்பொழுது ஏலியன் உடன் டான்ஸ் ஆடியவாறு பதிவிட்டுள்ள வீடியோ செம வைரலாகி வருகிறது.

வக்கீல் சாப்
தமிழைத் தொடர்ந்து தெலுங்கிலும் முன்னணி நடிகை பட்டியலில் இணைந்துள்ள ஸ்ருதிஹாசன் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார். அந்த வகையில் பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடிப்பில் சமீபத்தில் வெளியான வக்கீல் சாப் திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படம் வெளியாகி பட்டையை கிளப்பியது.

சலார்
கேஜிஎஃப் வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் ஒருபுறம் உருவாகிக் கொண்டிருக்க மறுபுறம் சலார் என்ற படத்தை இயக்கி வருகிறார் அதன் இயக்குனர் பிரசாத் நீல் . இந்த படத்தில் பாகுபலி பிரபாஸ் ஹீரோவாக நடித்து வர கதாநாயகியாக நடிகை ஸ்ருதிஹாசன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதன் படப்பிடிப்பு ஆந்திரா காட்டுப் பகுதிகளில் எடுக்கப்பட்டு வந்தது லாக்டவுன் காரணமாக தற்காலிகமாக படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

விஜய்சேதுபதிக்கு ஜோடியாக
தமிழ் ரசிகர்களால் பெரும் எதிர்பார்ப்புக்கு உள்ளாகியிருக்கும் லாபம் திரைப்படம் விஜய் சேதுபதி, எஸ்பி ஜனநாதன் கூட்டணியில் உருவாகியுள்ளது. சமூகத்திற்கு தேவையான கருத்துக்களை ஆணித்தரமாக தன்னுடைய ஒவ்வொரு திரைப்படங்களிலும் இயக்குனர் ஜனநாதன் தொடர்ந்து பதிவிட்டு கொண்டே வர லாபம் திரைப்படம் விவசாயத்தை பற்றியும் அதன் முக்கியத்துவத்தை பற்றிய படமாக உருவாகி உள்ளது. இந்தப் படத்தில் முதல்முறையாக விஜய்சேதுபதிக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார்.

அடிக்கடி காதலருடன் டேட்டிங்
சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி காதலருடன் டேட்டிங் செய்யும் புகைப்படங்களை பதிவிட்டு வைரலாகி வர இப்பொழுது ஏலியன் பொம்மையுடன் இணைந்து நடனமாடிய வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மிகவும் வித்தியாசமாக உள்ள இந்த டான்ஸ் வீடியோவை பார்த்த ரசிகர்கள் என்ன ஸ்ருதி ஏலியன் கூட எல்லாம் பிரண்ட்ஷிஃப் எனக்கேட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











