ராஜ்குமார் மகன் புனித்திற்கு நோ சொன்ன கமல் மகள் ஸ்ருதி

சென்னை: கால்ஷீட் கேட்ட கன்னட ஹீரோவுக்கு நோ சொல்லி இருக்கிறார் ஸ்ருதி.

கோலிவுட் உள்ளிட்ட தென்னிந்திய படவுலகம் எப்போதுமே வடநாட்டு ஹீரோயின்களைத்தான் தேடி அழைத்து வருகிறது. இதில் கன்னட படவுலகம் முன்னிலை வகிக்கிறது.

கன்னடத்தில் தற்போது நடித்து வரும் பெரும்பாலான ஹீரோயின்கள் தமிழ், தெலுங்கு, இந்தி படங்களிலும் பிரபலமாக இருப்பவர்கள்.

படம் அறிவிக்கும்போதே ஹீரோயினும்

படம் அறிவிக்கும்போதே ஹீரோயினும்

ஒவ்வொரு முறையும் சான்டல்வுட்டில் பெரிய ஹீரோக்கள் படங்கள் அறிவிக்கும்போது இதுபோன்ற பெரிய ஹீரோயின்கள் பெயரும் சேர்ந்தே அறிவிக்கப்படுவது வழக்கமாக உள்ளது.

புனித்தின் புதிய படம்

புனித்தின் புதிய படம்

கன்னட ஹீரோ புனித் ராஜ்குமார் பிறந்த தினம் சமீபத்தில் நடந்தது. அதில் அவரது புதிய படம் பற்றிய அறிவிப்பு வெளியானது. அப்படத்தை பிரபல தெலுங்கு பட இயக்குனர் ஜெயந்த் சி.பரன்ஜி இயக்குகிறார்.

நோ சொன்ன ஸ்ருதி ஹாசன்

நோ சொன்ன ஸ்ருதி ஹாசன்

இதில் புனித் ஜோடியாக நடிக்க ஸ்ருதியிடம் கால்ஷீட் கேட்கப்பட்டது. ஆனால் ஸ்ருதி தரப்பிலோ ‘நோ‘ என்ற பதில்தான் வருகிறதாம். சமீபத்தில் பட குழு சார்பில் ஸ்ருதியை தொடர்பு கொண்டு கால்ஷீட் கேட்டபோது வரும் ஆகஸ்ட் மாதம் வரை அவரிடம் கால்ஷீட் இல்லை என்று பதில் வந்ததாம்.

ஓவர் டூ பரிணிதி

ஓவர் டூ பரிணிதி

பட குழுவினர் மே மாதமே நீண்ட நாட்களுக்கு வெளிப்புற படப்பிடிப்புக்கு திட்டமிட்டிருப்பதால் இப்போது பாலிவுட்டிலிருந்து பரிணிதி சோப்ராவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X