»   »  குழப்பமான காதல்

குழப்பமான காதல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

வித்தியாசமான காதல் கதையுடன் முருகா என்ற பெயரில் ஒரு படம் கோலிவுட்டில்தயாராகி வருகிறது.

ராமேஸ்வரத்தைச் சேர்ந்த ஒரு இளைஞன் வேலைக்காக பட்டணத்திற்கு வருகிறான்.கூரியர் நிறுவனத்தில் வேலையும் கிடைக்கிறது. வேலைக்கு வந்த இடத்தில் அவனுக்குகாதல் பிறக்கிறது.

ஒரே பெண்ணை இரண்டு விதமான மன நிலையில் காதலிக்கிறான் (அந்நியன் பாதிப்புபோல). இந்தக் குழப்பமான காதலில் அவன் வெற்றி பெற்றானா அல்லது வீணாகிப்போனானா என்பதூதன் கதையாம்.

ராமேஸ்வரம் இளைஞனாக புதுமுகம் மகேஷ் நடிக்கிறார். அவரது காதலியாக ஸ்ருதிசர்மா என்ற புதுமுகம் அறிமுகமாகிறார். இங்கே ஸ்ருதியைப் பற்றி கொஞ்சம் பாலசொல்லியே ஆக வேண்டும்.

காலையில் எழுந்து கை நிறைய பில்டர் காப்பியோடு மொட்டை மாடியில் உட்கார்ந்துகொண்டு சூடான செய்திதாளை சுவையாக படிக்கும்போது கிடைக்குமே ஒரு ரிலாக்ஸ்,அப்படி இருக்கிறது ஸ்ருதி சர்மா முகத்தைப் பார்க்கும்போது. படு க்யூட்பேபிங்காணும்!

அவர்தான் மகேஷால் காதலிக்கப்படும் மாது. தமிழ் சினிமாவுக்கு கிடைத்துள்ளஇன்னொரு தேவ்தா!.

இவர் மட்டும் இல்லை, படத்தில் உட்டாலங்கடி காட்சிகளுக்காக சமிக்ஷாவும்இருக்கிறார். கிளாமர் சைடில் ஸ்ருதியை சைடு வாங்கிக் கொண்டு போகும்வேலையாம் சமிக்ஷாவுக்கு.

சிரிக்க வைக்க வடிவேலு, வில்லத்தனத்திற்கு ரியாஸ் கான், பிதாமகன் மகாதேவன்.இவர்கள் தவிர சித்ரா ஷெனாய் என்ற கன்னடத்து கற்கண்டும் படத்தில் இருக்கிறார்.

கார்த்திக் ராஜாதான் மியூசிக். படத்தை இயக்கப் போவது நேசன் (நம்ம பசுநேசன்அல்ல).

படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு ராமேஸ்வரம், ராமநாதபுரம் என தெற்குப் பக்கம்நடந்தது. சென்னையில்30 நாள்முகாமிட்டு மிச்சத்தை முடித்துவிட்டார்கள். அடுத்துகிளைமாகஸ் காட்சிக்காக குஜராத் போகிறார்களாம்.

குளுகுளுவென இரண்டு பாடல் காட்சிகளை கேரளாவிலும், பொள்ளாச்சியிலும்போட்டுத் தாக்க உள்ளனர்.

சமிக்ஷா இந்தப் படத்தை ரொம்ப நம்பியுள்ளார். அறிந்தும் அறியாமலும் படத்திற்குப்பின்னர் அவர் மீது பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஆனால் நேரமோ, என்னவோசரியாக எடுபடாமல் இருக்கிறார்.

முருகாவை நம்பி கிளாமர் கடலில் குதித்து கரையேற நினைக்கிறார். கை கொடுத்துதூக்கி விடுங்கப்பா ரசிகர்களே!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil