»   »  ஹீரோயின்

ஹீரோயின்

Posted By:
Subscribe to Oneindia Tamil

தேங்காய் சீனிவாசனின் பேத்தி ஸ்ருதிகாவுக்கு தமிழில் ஹீரோயின் அந்தஸ்து கிடைக்காது என்பது கிட்டத்தட்டஉறுதியாகி விட்டது.

சமீபத்தில் வெளியான தித்திக்குதே படத்தில் இவருக்கு நல்ல பெயர் தான். ஆனால், அதன் பிறகும் தமிழ்ப் படதயாரிப்பாளர்கள் யாரும் ஒரு போன் கூட செய்யவில்லை.

இதனால் கிடைக்கிற வேடங்களில் கலக்க முடிவு செய்திருக்கிறார்.

அதே நேரத்தில் தித்திக்குதேயில்நடிக்கும்போதே இடையிடையே கேரளாவுக்குச் சென்று நடித்த ஒரு மலையாளப் படத்தில் கவர்ச்சியை அள்ளிக்கொட்டியிருக்கிறார்.

மரப்பாச்சி பொம்மை கிடைத்தாலும் கூட அதை கவர்ச்சியாக காட்டி கலக்கி விடுவார்கள் மலையாளத்துக்காரர்கள்.

ஸ்ருதிகா போன்ற கும் பொண்ணுங்களை மட்டும் விட்டு விடுவார்களா?

இப்போதைய மலையாள சூப்பர் ஸ்டாரான திலீப்புடன் நடித்த அந்தப் படத்தில் கவர்ச்சி மழை பொழிந்துள்ளாராம்ஸ்ருதிகா.

படமும் சூப்பர் ஹிட் ஆகி விட இப்போது கேரளத்தில் இருந்து போன் மேல் போன். ஏகப்பட்ட மலையாள படசான்ஸ்கள் குவிந்து வருகின்றன.

இருந்தாலும் பார்த்து பார்த்து படத்தை தேர்வு செய்து தான் நடிக்கப் போகிறாராம்.

இருந்தாலும் முதல் சான்ஸ் தமிழுக்குத் தானாம். என்ன ரோல் என்றாலும் சரியாம்.

காரணம், தமிழில்ஹீரோயினுக்குத் தரும் சம்பளத்தில் பாதியைத் தான் கேரளத்தில் ஹீரோவுக்கே தருவார்கள் என்பதால்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil