மாடலிங்கில் ஸ்ருதி கமல்! கலைஞானி கமல்ஹாசனின் புதல்வி ஸ்ருதி, மாடலிங்கில் குதித்துள்ளார்.கமல்ஹாசன், சரிகா பிரிவுக்குப் பின்னர் மகள்கள் ஸ்ருதி, அக்ஷரா இருவரும் தாயுடன் மும்பை சென்று விட்டனர்.இதனால் மன அளவில் வேதனை அடைந்தார் கமல். இருப்பினும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் வழக்கம்போல படங்களில் நடித்து வந்தார்.தந்தையை விட்டுப் பிரிந்து விட்டாலும் கூட இரு மகள்களும் கமலுடன் பேசுவதை நிறுத்தி விடவில்லை. இந்நிலையில் ஸ்ருதி மட்டும் சென்னைக்கே மீண்டும் வந்து தந்தையுடன் சேர்ந்து கொண்டார்.இனிமையான குரல் வளம் கொண்டிருந்ததால், இசைஞானி அவரை தனது படங்கள் சிலவற்றில் பாட வைத்தார்.கமல்ஹாசனின் தேவர் மகன் படத்தில் போற்றிப் பாடடி பொண்ணே பாடலின் சில வரிகளைப் பாடியுள்ளார்ஸ்ருதி. அத்தோடு விருமாண்டியிலும் அவரது குரல் வளம் களை கட்டியிருந்தது.இப்படி அவ்வப்போது பின்னணி பாடி வந்த ஸ்ருதி, திடீரென ஒலிப்பதிவில் ஆர்வம் கொண்டு அதைக் கற்றுக்கொண்டார். இப்போது சில படங்களுக்கு சவுண்ட் ரெக்கார்டிங்கிலும் வேலை பார்க்கிறார்.இந் நிலையில் ஸ்ருதி இப்போது மாடலிங்கில் குதித்துள்ளார். அவரது தோழியும், ஆடை வடிவமைப்பாளரானபினுஜா தயாரிக்கும் விளம்பரப் படத்தில் ஸ்ருதி நடிக்கப் போகிறாராம்.இதற்காக சமீபத்தில் புகைப்பட டெஸ்ட் நடந்துள்ளது. அதில் திருப்தி அடைந்த பினுஜா, நேராக ஷூட்டிங்கிற்குப்போக முடிவு செய்து விட்டாராம்.பினுஜாவின் சீம்ஸ் நேச்சுரல் நிறுவனம், பெண்களுக்கான சுடிதார், நீண்ட சட்டைகள், குர்தாக்களை வடிவமைத்துவிற்பனை செய்கிறது. இப்போதைக்கு அந்த உடைகளுக்கான மாடலாக ஸ்ருதியை வைத்து போட்டோ செஷன்நடத்தி முடித்துள்ளார்கள்.ஸ்ருதி மாடலிங்கில் இறங்குவதற்கு தந்தை கமல் நோ அப்ஜெக்ஷன் சொல்லி விட்டாராம். பெரும்பாலும்,மகள்களின் சுதந்திரத்தில் கமல் தலையிடுவது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.இதேபோல இன்னொரு சூப்பர் ஸ்டார் மகளும் சூப்பர் தொழிலில் இறங்கியுள்ளார். ரஜினியின் இளைய மகளானசெளந்தர்யா, திரைப் படங்களில் கிராபிக்ஸ் வடிவமைப்பில் குதித்துள்ளார்.ரஜினியின் பாபா, சந்திரமுகி படங்களில் கிராபிக்ஸ் வேலைகளை அவர்தான் செய்தார். சந்திரமுகி டைடிலையும்ஹாலிவுட் லெவலில் புதிய முறையில் செய்து காட்டி அசத்தினார் செளந்தர்யா.மேலும் சில படங்களில் கிராபிக்ஸ் வேலைகள் செய்ய அழைப்பு வந்ததாம்.இருப்பினும் இப்போதைக்கு அஆ படத்தில் மட்டும் செளந்தர்யா தனது கைவண்ணத்தைக் காட்டியுள்ளாராம்.எஸ்.ஜே.சூர்யாவின் இயக்கத்தில் உருவாகியுள்ள அஆ படத்தில் செளந்தர்யாவின் கிராபிக்ஸ் காட்சிகள் பெரும்வரவேற்பைப் பெறும் என்கிறார்கள்.அத்தோடு அவரை சினிமாவில் நடிக்க வைக்கவும் ஒரு பக்கம் பெரும் முயற்சி நடக்கிறது. ஆனால், அதை ரஜினிவிரும்பவில்லை என்பதால் அத் திட்டம் இதுவரை வெல்லவில்லை.ராஜாக்கள் ஆண்டு முடித்து விட்டார்கள், இளவரசிகள் ஆளப் போகிறார்கள்!

By Staff

கலைஞானி கமல்ஹாசனின் புதல்வி ஸ்ருதி, மாடலிங்கில் குதித்துள்ளார்.

கமல்ஹாசன், சரிகா பிரிவுக்குப் பின்னர் மகள்கள் ஸ்ருதி, அக்ஷரா இருவரும் தாயுடன் மும்பை சென்று விட்டனர்.இதனால் மன அளவில் வேதனை அடைந்தார் கமல். இருப்பினும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் வழக்கம்போல படங்களில் நடித்து வந்தார்.

தந்தையை விட்டுப் பிரிந்து விட்டாலும் கூட இரு மகள்களும் கமலுடன் பேசுவதை நிறுத்தி விடவில்லை. இந்நிலையில் ஸ்ருதி மட்டும் சென்னைக்கே மீண்டும் வந்து தந்தையுடன் சேர்ந்து கொண்டார்.

இனிமையான குரல் வளம் கொண்டிருந்ததால், இசைஞானி அவரை தனது படங்கள் சிலவற்றில் பாட வைத்தார்.கமல்ஹாசனின் தேவர் மகன் படத்தில் போற்றிப் பாடடி பொண்ணே பாடலின் சில வரிகளைப் பாடியுள்ளார்ஸ்ருதி. அத்தோடு விருமாண்டியிலும் அவரது குரல் வளம் களை கட்டியிருந்தது.

இப்படி அவ்வப்போது பின்னணி பாடி வந்த ஸ்ருதி, திடீரென ஒலிப்பதிவில் ஆர்வம் கொண்டு அதைக் கற்றுக்கொண்டார். இப்போது சில படங்களுக்கு சவுண்ட் ரெக்கார்டிங்கிலும் வேலை பார்க்கிறார்.

இந் நிலையில் ஸ்ருதி இப்போது மாடலிங்கில் குதித்துள்ளார். அவரது தோழியும், ஆடை வடிவமைப்பாளரானபினுஜா தயாரிக்கும் விளம்பரப் படத்தில் ஸ்ருதி நடிக்கப் போகிறாராம்.

இதற்காக சமீபத்தில் புகைப்பட டெஸ்ட் நடந்துள்ளது. அதில் திருப்தி அடைந்த பினுஜா, நேராக ஷூட்டிங்கிற்குப்போக முடிவு செய்து விட்டாராம்.


பினுஜாவின் சீம்ஸ் நேச்சுரல் நிறுவனம், பெண்களுக்கான சுடிதார், நீண்ட சட்டைகள், குர்தாக்களை வடிவமைத்துவிற்பனை செய்கிறது. இப்போதைக்கு அந்த உடைகளுக்கான மாடலாக ஸ்ருதியை வைத்து போட்டோ செஷன்நடத்தி முடித்துள்ளார்கள்.

ஸ்ருதி மாடலிங்கில் இறங்குவதற்கு தந்தை கமல் நோ அப்ஜெக்ஷன் சொல்லி விட்டாராம். பெரும்பாலும்,மகள்களின் சுதந்திரத்தில் கமல் தலையிடுவது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல இன்னொரு சூப்பர் ஸ்டார் மகளும் சூப்பர் தொழிலில் இறங்கியுள்ளார். ரஜினியின் இளைய மகளானசெளந்தர்யா, திரைப் படங்களில் கிராபிக்ஸ் வடிவமைப்பில் குதித்துள்ளார்.

ரஜினியின் பாபா, சந்திரமுகி படங்களில் கிராபிக்ஸ் வேலைகளை அவர்தான் செய்தார். சந்திரமுகி டைடிலையும்ஹாலிவுட் லெவலில் புதிய முறையில் செய்து காட்டி அசத்தினார் செளந்தர்யா.

மேலும் சில படங்களில் கிராபிக்ஸ் வேலைகள் செய்ய அழைப்பு வந்ததாம்.

இருப்பினும் இப்போதைக்கு அஆ படத்தில் மட்டும் செளந்தர்யா தனது கைவண்ணத்தைக் காட்டியுள்ளாராம்.


எஸ்.ஜே.சூர்யாவின் இயக்கத்தில் உருவாகியுள்ள அஆ படத்தில் செளந்தர்யாவின் கிராபிக்ஸ் காட்சிகள் பெரும்வரவேற்பைப் பெறும் என்கிறார்கள்.

அத்தோடு அவரை சினிமாவில் நடிக்க வைக்கவும் ஒரு பக்கம் பெரும் முயற்சி நடக்கிறது. ஆனால், அதை ரஜினிவிரும்பவில்லை என்பதால் அத் திட்டம் இதுவரை வெல்லவில்லை.

ராஜாக்கள் ஆண்டு முடித்து விட்டார்கள், இளவரசிகள் ஆளப் போகிறார்கள்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X