சூர்யாவுடன் ஜோடி... சம்மதம் சொன்னார் ஸ்ருதி!

கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாக நடந்து வந்த பேச்சு வார்த்தையில் ஸ்ருதி விரும்பிய மாதிரி அனைத்துப் பாடல்களையும் அவரே பாடும் வாய்ப்பு, விரும்பிய சம்பளம் என ஸ்ருதியின் ஆசைகளை பார்த்துப் பார்த்து நிறைவேற்றுவதாக உறுதியளித்து இந்த சம்மதத்தைப் பெற்றுள்ளார் முருகதாஸ்.
குருவி, ஆதவன் பட வரிசையில் உதயநிதி ஸ்டாலின் தயாரிக்கும் அடுத்த படம் இது.
இன்னும் பெயர் சூட்டப்படாத இந்தப் படத்தில் இந்த படத்துக்கு இசை ஹாரிஸ் ஜெயராஜ்.
கிட்டத்தட்ட கஜினி டீம் அப்படியே இந்தப் படத்தில் கை கோர்க்கிறது. நான்கைந்து வருடங்கள் கழித்து முருகதாஸ் தமிழில் இயக்கும் படம் என்பதால் எக்கச்சக்க எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
அடுத்த மாதம் துவங்கவிருக்கும் இந்தப் படத்தின் பெரும்பகுதியை சீனாவிலும் மங்கோலிய எல்லைப் புறங்களிலும் படமாக்கத் திட்டமிட்டுள்ளார் முருகதாஸ்!
More from Filmibeat
உதயநிதி ஸ்டாலின் சூர்யா புதிய படம் முருகதாஸ் ஸ்ருதி ஹாஸன் ஹாரிஸ் ஜெயராஜ் china murugadoss nod sruthi hassan surya udayanidhi stalin


Click it and Unblock the Notifications











