தெலுங்கில் ஸ்ருதி ஹாஸனின் தாறுமாறு கவர்ச்சி.. ஐட்டம் நடிகைகளையே பின்னுக்குத் தள்ளினார்!
தெலுங்கில் கவர்ச்சிக்கு புது வரையறையை உருவாக்கியிருக்கிறார் ஸ்ருதி ஹாஸன். இயக்குநர் சொன்னால் எந்த அளவுக்கும் இறங்கி வந்து கவர்ச்சி காட்டி நடிப்பேன் என்று கூறியுள்ள அவர், அதை நடிப்பிலும் காட்டிவிட்டார்.
ஏற்கெனவே எவடு படத்தில் கவர்ச்சியில் கலக்கி எடுத்திருந்தார் ஸ்ருதி ஹாஸன். அதன் பிறகு இந்தியில் வெளியான டி டேயில் பாலியல் தொழிலாளியாக தத்ரூபமாக நடித்து ஒரு ஷாக் கொடுத்தார்.

ரேஸ் குர்ரம்
அடுத்து ஸ்ருதி நடித்துள்ள தெலுங்குப் படம் ரேஸ் குர்ரம். இதில் அவர் கவர்ச்சியின் அடுத்த கட்டத்தைத் தொட்டுவிட்டார் எனலாம்.

எதிர்ப்பு
இந்தப் படத்தின் போஸ்டர்கள் மகா வில்லங்கமாக அமைக்கப்பட்டிருந்தன. ஹீரோ மல்லாந்த நிலையில் பின்னால் கையூன்றி சாய்ந்திருக்க, அவர் கீழ் வயிற்றின் மேல் ஸ்ருதி சம்மணமிட்டு அமர்ந்திருப்பார். அவரது மாராப்பு முற்றிலும் விலகி, முன்னழகின் பெருமளவு வெளியில் தெரியும்படி பார்த்துக் கொண்டார் ஸ்ருதி.

செம ஹாட்
அடுத்து, அந்தப் படத்தின் பாடல் காட்சியொன்றில் ஸ்ருதி பெயரளவுக்குதான் ரவிக்கை அணிந்திருக்கிறார். இதை அவர் அணியாமலே இருந்திருக்கலாம் என்று கூறும் அளவுக்கு பெரும் கவர்ச்சியாக ஆட்டம் போட்டுள்ளார். கிட்டத்தட்ட டாப்லஸ் காட்சி அது.

என்ன சொல்கிறார் ஸ்ருதி?
இந்த விமர்சனங்களுக்கு ஸ்ருதி அளித்துள்ள பதில் இது:
"என்னைவிட கிளாமராக எத்தனையோ பேர் நடித்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால், என்னை மட்டும் விமர்சிப்பது நியாயமற்றது," என்கிறார்.

இயக்குநர் சொன்னால்...
மேலும் அவர் கூறுகையில், "சினிமாவில் எதுவும் என் முடிவல்ல. இயக்குநர்கள் சொல்வதை நான் செய்கிறேன். அந்தந்த கதாபாத்திரமாக மாறி நடிக்கிறேன். கவர்ச்சியின் எல்லை பற்றியெல்லாம் எனக்குத் தெரியாது. கதைக்குத் தேவையென்றால் எந்த எல்லை வரையிலும் போகலாம். இதில் எந்தத் தவறுமில்லை," என்றார்.


Click it and Unblock the Notifications











