»   »  கோபக்கார கிளி நயன்தாராவுக்கு தடை போட்ட ஹைதராபாத் ஸ்டார் ஹோட்டல்கள்?

கோபக்கார கிளி நயன்தாராவுக்கு தடை போட்ட ஹைதராபாத் ஸ்டார் ஹோட்டல்கள்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: ஹைதராபாத்தில் உள்ள ஸ்டார் ஹோட்டல்கள் நயன்தாரா தங்குவதற்கு அனுமதி அளிக்க மறுக்கிறதாம்.

நயன்தாரா தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் பிசியாக உள்ளார். தனக்கு மவுசு அதிகம் இருப்பதை உணர்ந்த அவர் காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்பதற்கேற்ப தனது சம்பளத்தை ரூ.4 கோடியாக உயர்த்தியுள்ளார்.

இந்நிலையில் நயன்தாரா பற்றி புதிய தகவல் கிடைத்துள்ளது.

ஹோட்டல்கள்

ஹோட்டல்கள்

நயன்தாரா ஹைதராபாத்தில் உள்ள பல ஸ்டார் ஹோட்டல்களில் தங்கியுள்ளார். தற்போது எந்த ஸ்டார் ஹோட்டலும் அவர் வருவதை விரும்பவில்லை என்று செய்தி வெளியாகியுள்ளது.

நயன்தாரா

நயன்தாரா

நயன்தாரா எப்பொழுது ஹோட்டலுக்கு வந்தாலும் கோபமாக வருகிறாராம். அந்த கோபத்தை ஹோட்டல் ஊழியர்கள் மீது காட்டுவதுடன் கைக்கு கிடைத்த பொருட்களை போட்டு உடைத்துவிடுகிறாராம்.

எதற்கு?

எதற்கு?

தான் உடைக்கும் பொருட்களுக்கு ஆகும் பணத்தை நயன்தாரா திருப்பிக் கொடுத்துவிடுகிறாராம். இருந்தாலும் இவரது ஏச்சையும், பேச்சையும் கேட்டுக் கொண்டு பொருட்கள் உடைப்பதை பார்த்து ஹோட்டல் உரிமையாளர்கள் கடுப்பாகிவிட்டார்களாம்.

தடை

தடை

நயன்தாராவின் கோபத்தால் இனி அவரை தங்கள் இடத்தில் தங்க வைக்க ஹோட்டல்கள் விரும்பவில்லையாம். இதனால் ஸ்டார் ஹோட்டல்கள் அறிவிக்கப்படாத தடையை விதித்துள்ளதாக கூறப்படுகிறது.

English summary
Buzz is that star hotels in Hyderabad have unofficially banned Nayanthara from staying there.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil