»   »  ஸ்டார்களின் தீபாவளி

ஸ்டார்களின் தீபாவளி

Subscribe to Oneindia Tamil

தீபாவளியை சாதாரண ஜனங்கள் மட்டும்தான் ஜாலியாக கொண்டாடுவார்களா என்ன?நட்சத்திரங்களும் கூடத்தான் இந்த தீப ஒளித் திருநாளை தடபுடலாககொண்டாடுவார்கள்.

தமிழ் சினிமா ஸ்டார்கள் சிலரைப் பார்த்து உங்க தீபாவளி எப்படி என்று பட்டாசைகொளுத்திப் போட்டோம். சரவெடியாக பொறிந்து தள்ளி விட்டார்கள் தங்களதுதீபாவளி குறித்து.

முதலில் நச் நமீதா. வட நாட்டுப் பொண்ணாச்சே, தீபாவளி என்றதும் கண்கள்பெரிதாக, சந்தோஷமாக குதூகலித்தார். எங்க ஊர் சூரத்தில் எல்லாம் தீபாவளியைவெகு விமரிசையாக கொண்டாடுவார்கள். பட்டாசுகள் என்ன, விளக்குகள்அணிவரிசை என்ன, அய்யோ, எல்லாமே தடபுடலாக இருக்கும்.

ஏகப்பட்ட இனிப்புகளை தயாரித்து பக்கத்து வீட்டுக்கார்ரகள், சொந்தக்காரர்கள்,நண்பர்கள் என எல்லோருக்கும் கொடுத்து சந்தோஷமாக கொண்டாடுவோம்.

கடந்த ஆண்டு என்னால் சூரத் போய் கொண்டாட முடியவில்லை. படு பிசியாகஇருந்ததால் சென்னையிலேயே சிம்பிளாக கொண்டாடினேன். இந்த முறையும்ஊருக்குப் போக நேரம் கிடைக்குமோ என்னவோ, கிடைத்தால் போய் ஜமாய்த்துவிடுவேன் என்கிறார் ஏக்கப் பெருமூச்சுடன்.

சிபிராஜ்:

சிபிராஜுக்கு தீபாவளி கொண்டாட்டம் என்று கேட்டதும் ஜாலியாகி விட்டார். எங்கவீட்டில் தீபாவளி என்றாலே அது புதுப் படங்களை போட்டிப் போட்டு பார்ப்பதுதான்.நான் எனது நண்பர்களுடன் புதுப் படங்களை பார்க்க கிளம்பி விடுவேன். அன்றுபூராவும் வீட்டில் என்னைப் பார்க்கவே முடியாது. ஓப்பனிங் ஷோவை பார்ப்பதே ஒருதிரில்லான அனுபவம்தான்.

பல நேரங்களில் எனது குடும்பத்தினரும் கூடவே வருவார்கள். தியேட்டர்களில்நாங்கள் செய்யும் அலும்புகளை விட அய்யா (அப்பாவை அப்படித்தான்அழைக்கிறார்) செய்யும் அட்டகாசம்தான் படு கலக்கலாக இருக்கும். படத்தைப்பார்த்தபடி கமெண்டுகளை அடித்துக் கொண்டே இருப்பார். படு ஜாலியானஅனுபவம்.

மற்றபடி பட்டாசு கொளுத்துவதில் எனக்கு அவ்வளவு இன்டரஸ்ட் கிடையாது. டிவிபார்ப்பேன், பட்சனங்களை ஒரு கை பார்ப்பேன் என்றார்.

சோனியா அகர்வால்:

சோனியா அகர்வாலுக்கு இந்த ஆண்டு தீபாவளி கிடையாதாம். அவரது குடும்பத்தில்நெருங்கிய உறவினர் ஒருவர் இறந்து விட்டதால் தீபாவளியைகொண்டாடவில்லையாம். மற்றபடி வழக்கமாக குடும்பத்தோடு படு ஜாலியாககொண்டாடி விடுவாராம் சோனியா.

ஆசின்:

மலையாளத்துப் பொண்ணாக இருந்தாலும் பட்டாசு வெடித்து ஜாலியாகதீபாவளியைக் கொண்டாடுவாராம் ஆசின். ஆனால் இந்த ஆண்டு தசாவதாரம்படப்பிடிப்பில் பிசியாக இருப்பதால் அதற்கு நேரம் இருக்காது என்று ஏக்கத்தோடுகூறுகிறார்.

த்ரிஷா:

கொண்டாட்ட நாயகி த்ரிஷாவுக்கு தீபாவளி என்றவுடனேயே அவரோடதோழிகள்தான் முதலில் நினைவுக்கு வருவார்களாம். காரணம், தீபாவளியன்றுவீட்டுக்கு உள்ளேயும், வெளியேயும் பட்டாசுகளை கொளுத்தி அமர்க்களப்படுத்திவிடுவார்களாம் த்ரிஷாவும், அவரது தோழிகளும்.

பெரிய பெரிய ஆம்பளைஸே போடப் பயப்படும் பயங்கர வெடிகளையெல்லாம் படுகூலாக வெடித்துத் தள்ளுவாராம் த்ரிஷா. ஆனால் இந்த ஆண்டு தீபாவளியன்றுசெல்வராகவனின் தெலுங்குப் பட ஷூட்டிங்குக்காக ஹைதராபாத் போய் விடுவாராம்.அதனால் யூனிட்டோடு சேர்ந்துதான் இந்த தீபாவளி கொண்டாட்டம் என்கிறார்முறுவலித்தபடி.

கோபிகா:

கோழிமுட்டை கண்ணழகி கோபிகா இதுவரை தீபாவளியைக் கொண்டாடியதேஇல்லையாம். தமிழ்ப படங்களில் நடிக்க ஆரம்பித்த பிறகுதான் அவர் தீபாவளியைகொண்டாட ஆரம்பித்தாராம். கடந்த ஆண்டு சென்னையில் ஒரு டிவி நிகழ்ச்சிக்காகநான்கு குடும்பத்தினருடன் சேர்ந்து தீபாவளியைக் கொண்டாடினாராம்.

அதுதான் இவரது முதல் தீபாவளிக் கொண்டாட்டமாம். படு ஜாலியாக இருந்ததாம்.இந்த ஆண்டு மலையாளப் பட ஷூட்டிங்கில் பிசியாக இருப்பதால் நோதீபாவளியாம்.

நட்சத்திரங்கள் எல்லாம் தீபாவளி கொண்டாட்டத்திற்கு அட்டகாசமாக தயாராகிவிட்டார்கள். நாமளும் நல்லபடியா எண்ணையைத் தேய்த்துக் குளித்து(இன்னிக்காச்சும் குளிப்போமே!) படபடவென்று பட்டாசுகளோடு கொண்டாட்டத்தைஆரம்பிப்போம்.

Read more about: diwali and stars
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil