»   »  பெருசு, சிறுசு எல்லாம் பார்ப்பது இல்லை, கதை தான் முக்கியம்: த்ரிஷா

பெருசு, சிறுசு எல்லாம் பார்ப்பது இல்லை, கதை தான் முக்கியம்: த்ரிஷா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சீனியர் ஹீரோக்கள், இளம் ஹீரோக்கள் என்று எல்லாம் பார்ப்பது இல்லை கதை தான் முக்கியம் என்கிறார் நடிகை த்ரிஷா.

த்ரிஷாவும், விஜய் சேதுபதியும் ஜோடி சேர்ந்துள்ள படம் 96. அந்த படத்தின் பூஜை மற்றும் துவக்க விழா சென்னை சாலிகிராமத்தில் நடைபெற்றது. விழாவில் த்ரிஷா, விஜய் சேதுபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அப்போது த்ரிஷா செய்தியாளர்களிடம் கூறும்போது,

96

96

விஜய் சேதுபதி யதார்த்தமாக நடிப்பவர். அவரின் படங்களை பார்த்துள்ளேன். 96 படத்தின் கதை எனக்கு பிடித்திருந்ததால் நடிக்க சம்மதித்தேன். நான் கதைக்கு முக்கியத்துவம் அளிப்பவள்.

ஹீரோக்கள்

ஹீரோக்கள்

சீனியர் ஹீரோ, இளம் ஹீரோ படம் என்று எல்லாம் பார்க்க மாட்டேன். கதை பிடித்திருந்தால் உடனே ஓகே சொல்லிவிடுவேன். கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள 6 படங்களில் நான் நடித்தேன். அந்த படங்களில் இளம் ஹீரோக்களே நடித்துள்ளனர்.

கதை

கதை

கதை நன்றாக இருந்தால் புதுமுக இயக்குனர், புதுமுக நடிகர்களின் படங்களில் கூட நடிக்க தயங்க மாட்டேன். என்னுடன் யார் நடிக்கிறார்கள் என்பதை பார்த்து படத்தை தேர்வு செய்வது இல்லை.

சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயனுடன் எப்பொழுது நடிப்பீர்கள் என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு த்ரிஷா கூறும்போது, நல்ல கதை கிடைத்தால் நிச்சயம் சிவகார்த்திகேயனுடன் நடிப்பேன் என்றார்.

English summary
Trisha said that she doesn't care about the hero of the movie. She always gives importance to the story rather than heroes.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil