Kayadu Lohar: சட்டைக்கு மேல் உள்ளாடை.. சூப்பர் வுமனா மாறும் கயாடு லோஹர்.. என்னமா இப்படி பண்றீங்களேமா?
சென்னை: தென்னிந்திய சினிமாவில் இப்போது கயாடு லோஹர் என்ற பெயர்தான் தான் அதிகம் அடிபடுகிறது. காரணம் அவர் நடித்த டிராகன் படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. அதில் அவர் ஏற்று நடித்த பல்லவி கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. படமும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்து விட்டதால், கயாடு லோஹர் தமிழ் மக்களிடத்தில் நன்றாக ரீச் ஆகியுள்ளார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்போதும் செம ஆக்டிவாக இருக்கும் நடிகை கயாடு தற்போது வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.
கயாடு நேரடியாக தமிழில் இருந்து தனது சினிமா வாழ்க்கையை தொடங்கவில்லை என்றாலும், டிராகன் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளார். இதனால் இன்ஸ்டாகிராமில் இவரைப் பின்தொடரும் ரசிகர்கள் பட்டாளம் நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே வருகிறது. தற்போது சிம்புவின் 49 வது படத்தில் கமிட் ஆகி நடித்து வரும் கயாடு, இது மட்டும் இல்லாமல், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் என அனைத்திலும் ஒரு ரவுண்டு வர முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார்.
கயாடு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற காரணங்களில் ஒன்று அவரது எக்ஸ்பிரஷன். டிராகன் படத்தின் அவரது போர்ஷனில் இவரது நடிப்பை பலரும் பாராட்டினார்கள். ஏற்கனவே அவருக்கு தெலுங்கில் நல்ல ரீச் இருப்பதால், டிராகன் படம் தெலுங்கிலும் அடி தூள் போட கயாடு ஒரு காரணம் ஆகிப் போனார். இப்போது மொத்த தென்னிந்திய சினிமாவும் கவனிக்கும் ஒரு நடிகையாக கயாடு உள்ளார்.

ஆக்டிவ்: இவர் ஷீட்டிங்கில் செம பிஸியாக இருந்தாலும், அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செம ஆக்டிவாக இருக்கிறார். தனது புகைப்படங்களை செம டிரெண்டியாக பகிர்வது, வீடியோக்களை பகிர்வது என தனது ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார். இவரது புகைப்படங்களுக்கும் வீடியோக்களுக்கும் லைக்குகள் மில்லியன் கணக்கில் குவிகிறது. இந்நிலையில் அவர் இன்று அதாவது மே 20ஆம் தேதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.
வீடியோ: அந்த வீடியோவில் கயாடு லோஹர் சட்டை மற்றும் ஜீன்ஸ் பேண்ட் அணிந்துள்ளார். இதில் இவர் அணிந்துள்ள சட்டைக்கு மேல், சிவப்பு நிற உள்ளாடையை அணிந்து விளையாட்டுத்தனமாக வீடியோ எடுத்து பகிர்ந்துள்ளார். அவர் அந்த வீடியோவில், இவர் கோமாளித்தனமாக ஆடுவதும், சுவிங்கத்தை தூக்கி வீசி வாயிலேயே பிடிக்கப் பார்ப்பதும் என சேட்டைகள் செய்கிறார். அதேபோல், நாயைப் போல, நாயைப் பின் தொடர்ந்து செல்கிறார். மேலும் தனது க்யூட்டான எக்ஸ்பிரஷன்களைக் கொடுக்கிறார்.

படங்கள்: இந்த வீடியோவில் கயாடு வழக்கம் போல் செம க்யூட்டாக இருப்பதால் யூத்துகள் அனைவரும் மனதை பறிகொடுத்தது போல அவருக்கு லைக்குகளை வாரி வழங்கி வருகிறார்கள். இவர் கமிட் ஆகியுள்ள சிம்புவின் 49வது படத்தில் சந்தானம் கிட்டத்தட்ட 13 ஆண்டுகளுக்குப் பின்னர் காமெடியனாக கமிட் ஆகி நடித்து வருகிறார். இந்த படம் இந்த ஆண்டு இறுதிக்குள் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்கிறார். இந்த படத்தை ராம் குமார் இயக்குகிறார். இது இல்லாமல் ஜி.வி. பிரகாஷ் குமாருடன் இம்மார்டல் படத்திலும் கமிட் ஆகியுள்ளார்.


Click it and Unblock the Notifications











