For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  Actress Trisha: என்ன அழகு.. எத்தனை அழகு.. ஆஹா திரிஷா.. எப்பவும் எவர்கிரீன்!

  |

  சென்னை: திரிஷாவின் டிவிட்டரில் ஒரு போட்டோ பார்த்தோம்.. ஆஹா.. என்ன அழகு.. எத்தனை அழகு.. வசீகரிக்கிறது இந்த வயதிலும் அவரது அற்புத அழகு.

  நடிகை த்ரிஷா போட்டியில் மிஸ் சென்னையாக பட்டம் வென்று,, முதலில் மாடலிங்கில் ஈடுபட்டார். நிறைய விளம்பரப் படங்களில் நடித்தார்.மிக ஒல்லியான உடல்வாகு, அதே சமயம் நல்லஉயரம் என்று அழகில் பிரமிக்க வைத்தார்.

  பிறகு ஜோடி என்று ஒரு படம் அதில் நடிகை சிம்ரன், நடிகர் பிரசாந்த் ஜோடியாக நடிக்க, சிம்ரனின் கல்லூரித் தோழியாக சிறிய வேடத்தில் நடித்து இருப்பார் த்ரிஷா.கண்டிப்பாக இவரும் திரையுலகில் நல்ல வாய்ப்புக்காக காத்துதான் இருந்தார்.

  நடிகை த்ரிஷாவின் அம்மாவும் நல்ல அழகு. இருவரும் சேர்ந்து சென்றால் அம்மா பெண் என்று யாரும் சொல்ல மாட்டார்கள். அக்கா,தங்கை என்றுதான் வியந்து பாராட்டுவார்கள். இது குறித்து நடிகர் மாதவன் கூட ஒரு முறை பாராட்டி இருக்கார்.

  Aadai: Aadai: "பாஞ்சாலிக்கு கூட ஐந்து தான்... எனக்கு 15 கணவர்கள்"... அடுத்த சர்ச்சைக்கு தயாரான அமலா பால்!

  த்ரிஷா கிருஷ்ணன்

  த்ரிஷா கிருஷ்ணன்

  த்ரிஷாவின் அம்மாவும், அப்பாவும் கருத்து வேறுபாடால் பிரிந்து இருந்தாலும், த்ரிஷாவுக்கு அப்பா என்றால் உயிர். அதே போல அம்மாவின் மீதும் பிரியம் அதிகம்தான். அப்பா கிருஷ்ணன் கடந்த இரண்டு மூன்று வருடங்களுக்கு முன்னர்தான் இறந்து போனார். அவர் கடைசி வரை தான் சம்பாதித்து தனது சம்பாத்தியத்தில் சாப்பிட வேண்டும் என்று லட்சியத்தோடு வாழ்ந்து கடைசிவரை அதை கடைப்பிடித்து இறந்தார் என்று அவரின் நண்பர்கள் சொல்லி இருக்கிறார்கள்.

  சமயத்தில் அம்மா

  சமயத்தில் அம்மா

  அப்பா இறந்த சமயத்தில் கிட்டத்தட்ட ஒரு வாரம் த்ரிஷா சரியாக சாப்பிடாமல், தூங்காமல், ரொம்ப மூட் அப்செட்டில் இருந்தார்.அப்போது அவரை ஆறுதல் சொல்லி தேற்றியவர் எப்போதும் த்ரிஷாவுக்கு நல்ல தோழியாக இருக்கும் அம்மாதான். த்ரிஷா தனக்கு எந்த கஷ்டம் வந்த போதும் அம்மா பேசினால் மட்டுமே ஆறுதல் அடைவாராம். .

  மவுனம் பேசியதே

  மவுனம் பேசியதே

  த்ரிஷாவுக்கு நல்ல பெயர் கொடுக்கும் விதமாக மவுனம் பேசியதே படம் புக் ஆனது. அதுவும் அப்போதுதான் அப்கமிங்கில் இருந்த நடிகர் சூர்யாவுடன் நடிக்க வாய்ப்பு. அப்படியே அந்த கதா பாத்திரத்துக்கு கனக் கச்சிதமாக பொருந்தி இருந்ததில் தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். ஆனால், அந்த படத்தில் சூர்யாவுக்கு த்ரிஷா ஜோடி இல்லை என்றாலும், படம் சூப்பர் ஹிட்.

  ராசி நடிகை

  ராசி நடிகை

  அப்போதுதான் நடிகை த்ரிஷா ராசி நடிகையானது. மாதவன், ஷ்யாம் நடித்த லேசா லேசா, விக்ரமுடன் நடித்த சாமி என்று பல படங்கள் சூப்பர் ஹிட் அடித்தன. சாமி படத்தில் ஐயர் வீட்டு பெண் கதாபாத்திரத்துக்கு ரொம்ப பொருத்தமா இருந்தார். அதோடு, நடிகர் விஜயுடன் நடித்த கில்லி படத்தில் சரியான பயந்த பெண்ணாக நடிப்பில் அசத்தி இருப்பார். உலக நாயகன் கமலுடன் சேர்ந்து நடித்தும், பாடியும் இருக்கார்.

  த்ரிஷா தைரியம்

  த்ரிஷா தைரியம்

  ரொம்ப ஜாலியான பெண்தான் த்ரிஷா என்றாலும், அவர் அப்செட் ஆகும்படி எத்தனையோ விஷயங்கள் அவருக்கு எதிராக நடந்து இருக்கிறது. அதை சிறிதும் சட்டை செய்யாமல்,எங்கும் ஓடி ஒளியாமல், இண்டஸ்ட்ரியிவ் அடுத்தடுத்து படங்கள் என்று கமிட் செய்த அத்தனை படங்களையும் தாமதம் இன்றி முகம் சுளிக்காமல் முடித்து கொடுத்தவர் த்ரிஷா. இந்த விஷயத்தில் நடிகைகள் இவரை ரோல் மாடலாக எடுத்துக்கலாம்.

  96 வரை

  96 வரை

  த்ரிஷா மவுனம் பேசியதே படம் முதல் 96 படம் வரை அதே உடல் வாகுடன் முதலில் பார்த்த அதே மாதிரி மிக அழகாக இருக்கிறார். விண்ணைத் தாண்டி வருவாயா படம் அவரின் அழகை மேலும் மெருகூட்டி காட்டிய படம். அந்த அழகோடு இதோ பாருங்கள் தமது ட்வீட்டர் வலைத் தளத்தில் அழகிய படத்தை பதிவிட்டு இருக்கார்.

  த்ரிஷாவுக்கு பிரியாணி ரொம்ப பிடிக்குமாம். எவ்வளவு சாப்பிட்டாலும் உடல் எடை மட்டும் கூடாது என்று அவரே சொல்லி இருக்கார்... கூடவே கூடாது.. அப்படியே இருங்க திரிஷா.. அதுதான் நல்லாருக்கு!

  English summary
  Actress Trisha graduated as Miss Chennai in the competition and got involved in modeling first. She has acted in a lot of commercials.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X