ஸ்டைலிஷ் குயின் நிவேதா பெத்துராஜ் வெளியிட்ட கிக்கேற்றும் புகைப்படம்!

சென்னை: கிராமத்து பெண் கதாபாத்திரம் என்றாலும் சரி சிட்டி கேர்ள் கதாபாத்திரம் என்றாலும் சரி அதில் கச்சிதமாகப் பொருந்த கூடிய நடிகை நிவேதா பெத்துராஜ்

தமிழை விடவும் தெலுங்கில் இவருக்கு அதிக வாய்ப்புகள் குவிந்து வருவதால் தெலுங்கில் அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார்

தமிழில் வெங்கட் பிரபு இயக்கத்தில் கலர்ஃபுல்லாக உருவாகிவரும் பார்ட்டி திரைப்படத்தில் நடித்து வரும் நிவேதா பெத்துராஜ் இப்பொழுது செம ஸ்டைலிஷான உடையில் கிக்கேற்றும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை தவிக்க விட்டுள்ளார்.

முதல் படம் பெரிதாக கை கொடுத்தது

முதல் படம் பெரிதாக கை கொடுத்தது

ஒரு நாள் கூத்து என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை நிவேதா பெத்துராஜ் அதைத்தொடர்ந்து தேர்ந்தெடுத்த கதைகள் அனைத்தும் அவருக்கு மிகப்பெரிய அளவில் கை கொடுத்தத. அந்த வகையில் வெளியான பொதுவாக எம்மனசு தங்கம, டிக் டிக் டிக், திமிரு பிடிச்சவன் உள்ளிட்ட திரைப்படங்கள் தொடர்ந்து வெற்றிகளை கொடுத்ததால் தெலுங்கில் இருந்தும் அதிக வாய்ப்புகள் இவரது வாசலை தட்டியது.

இரண்டாவது கதாநாயகியாக நடித்தார்

இரண்டாவது கதாநாயகியாக நடித்தார்

கிராமத்து பெண் கதாபாத்திரம் என்றாலும் சிட்டி கேர்ள் கதாபாத்திரம் என்றாலும் சரி அதில் கச்சிதமாகப் பொருந்த கூடிய நிவேதா பெத்துராஜ் அல்லு அர்ஜுன் நடிப்பில் மிகப்பெரிய வசூல் சாதனை செய்த அல வைகுண்டபுரம்லோ படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடித்திருந்தார். அல வைகுண்டபுரம்லோ கொடுத்த பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் நிவேதா பெத்துராஜ் மார்க்கெட் வேகமாக உயர்ந்து வருகிறது.

கமர்ஷியல் ரீதியாக வெற்றி பெற்றது

கமர்ஷியல் ரீதியாக வெற்றி பெற்றது

தமிழில் கடைசியாக பொன்மானிக்கவேல் என்ற படத்தில் நடித்திருந்தார். நடிகரும், இயக்குனரும், நடன இயக்குனருமான பிரபுதேவா இந்த படத்தில் முதல் முறையாக போலீஸ் அதிகாரியாக நடித்து மிரட்டியிருப்பார். பெரும் எதிர்பார்ப்பில் வெளியான இந்த திரைப்படம் நீண்ட காத்திருப்புக்குப் பிறகு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. கமர்சியல் ரீதியாக இந்த திரைப்படம் அனைவரையும் கவர்ந்திருந்தது.

ஸ்டைலிஷான உடையில்

ஸ்டைலிஷான உடையில்

தமிழில் முதல் முதலாக அறிமுகமாகி இருந்தாலும் தெலுங்கு சினிமாவில் வெற்றிகரமாக கால்பதித்து இருக்கும் இவருக்கு அதிக பட வாய்ப்புகள் குவிகிறது எனவே தொடர்ந்து தெலுங்கில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். இதற்கிடையில் தமிழில் வெங்கட் பிரபு இயக்கத்தில் கலர்ஃபுல்லாக தயாராகிவரும் பார்ட்டி என்ற படத்தில் கதாநாயகியாக அடுத்து வருகிறார். இந்த நிலையில் சமூக வலைதளங்களில் நிவேதா பெத்துராஜ் புகைப்படங்கள் தொடர்ந்து வைரலாகி வருகிறது அந்த வகையில் செம ஸ்டைலிஷான உடையில் நிவேதா பெத்துராஜ் கிக்கேற்றும் புகைப்படங்களை இளசுகளை தவிக்க விட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X