ஸ்டைலிஷ் தமிழச்சியே... ஹன்சிகாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையதளத்தில் வைரல்!

சென்னை : ஹன்சிகா மோத்வானியின் 50வது திரைப்படமான மகா திரில்லர் கதை களத்தில் உருவாகி வருகிறது

கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, திரிஷா ஆகிய நடிகைகளை தொடர்ந்து ஹன்சிகாவும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்

இந்த நிலையில் ஸ்டைலிஷ் தமிழச்சியாக ஸ்டைலாக ஹன்சிகா மோத்வானி எடுத்த லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகின்றன

கொழுக்மொழுக் தேகத்துடன்

கொழுக்மொழுக் தேகத்துடன்

குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகி இப்போது வெற்றிகரமாக முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை ஹன்சிகா மோத்வானி தமிழ் சினிமாவிற்கு மாப்பிள்ளை என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகம் செய்யப்பட்ட இவருக்கு முதல் படத்திலேயே மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் உருவானது கொழுக்மொழுக் தேகத்துடன் ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்தது தென்னிந்தியாவின் முன்னணி கதாநாயகியாக வலம் வந்து கொண்டுள்ளார். சூர்யா, விஜய், கார்த்தி,ஜெயம் ரவி, சிவகார்த்திகேயன்,விஷால் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வந்த ஹன்சிகா மோத்வானி இப்பொழுது கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதைகளிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

ஹன்சிகாவின் 50வது படமாக

ஹன்சிகாவின் 50வது படமாக

துப்பாக்கி முனை, 100 ஆகிய படங்களை தொடர்ந்து ஹன்சிகா மோத்வானிக்கு மகா ரிலீசுக்கு தயாராக உள்ளது. நயன்தாரா, கீர்த்தி சுரேஷ்,திரிஷா ஆகிய நடிகைகளை தொடர்ந்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க ஆரம்பித்துள்ளார். அந்த வரிசையில் இப்போது ஹன்சிகா மோத்வானியும் தற்போது இணைந்துள்ளார். அறிமுக இயக்குனர் ஜாமீல் இயக்கத்தில் ஹன்சிகாவின் 50வது படமாக மகா உருவாகி உள்ளது. வாலு படத்திற்கு பிறகு சிம்பு மற்றும் ஹன்சிகா மீண்டும் இணைந்து நடிக்காமல் இருந்த சூழலில் மகா படத்தில் சிறப்பு தோற்றத்தில் சிம்பு நடித்து வருகிறார். மேலும் ஸ்ரீகாந்த் இதில் ஹீரோவாக நடித்து வருகிறார்.

105 நிமிடங்கள் இடைவிடாமல் நடித்து

105 நிமிடங்கள் இடைவிடாமல் நடித்து

முழுக்க முழுக்க திரில்லர் கதை களத்தில் உருவாகியுள்ள மகா மிக விரைவிலேயே ரிலீசாக இருக்க அதை தொடர்ந்து 10 5 மினிட்ஸ் என்ற படத்தில் ஹன்சிகா நடித்து வருகிறார். இதில் தொடர்ந்து 105 நிமிடங்கள் இடைவிடாமல் நடித்துள்ளார். மேலும் ரவுடிபேபி மற்றும் மை நேம் இஸ் ஸ்ருதி ஆகிய படங்களிலும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் ரோலில் நடித்து வருகிறார்.

ஸ்டைலிஷ் தமிழச்சியாக

ஸ்டைலிஷ் தமிழச்சியாக

இவ்வாறு தொடர்ந்து வித்தியாசமான கதைகளையும் வித்தியாசமான முயற்சிகளையும் எடுத்து வரும் ஹன்சிகா மோத்வானி உடல் எடையை தாறுமாறாக குறைத்து இப்பொழுது முற்றிலுமாக ஸ்லிம்மாக மாறியுள்ளார். இந்த நிலையில் ஸ்டைலிஷ் தமிழச்சியாக செம ஸ்டைலிஷாக எடுத்த லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்களை இப்பொழுது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X