ஸ்டைலிஷ் தமிழச்சியே... பார்ட்டி மோடில் நடிகை நிதி அகர்வால் !

சென்னை : இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான ஈஸ்வரன் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நிதி அகர்வால்.

ஒரு புறம் ஈஸ்வரன் மற்றொரு புறம் பூமி என இரண்டு திரைப்படங்களும் ஒரே சமயத்தில் நிதி அகர்வாலுக்கு வெளியாகி மிகப்பெரிய அறிமுகத்தைக் கொடுத்தது.

இப்பொழுது இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் த்ரில்லர் கதையில் நடித்து வரும் நிதி அகர்வால் பார்ட்டி மோடில் செம ஸ்டைலாக இருக்கும் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஸ்டைலிஷ் தமிழச்சி என பாராட்டுகின்றனர்.

சிம்பு நடிப்பில் வெளியான ஈஸ்வரன்

சிம்பு நடிப்பில் வெளியான ஈஸ்வரன்

நடிகர் சிம்பு உடல் எடையை குறைத்து இப்போது அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார். தன்னுடைய இரண்டாவது இன்னிங்சில் ஈஸ்வரன் மூலம் பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பித்தவர் இப்போது ராக்கெட் வேகத்தில் அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான ஈஸ்வரன் திரைப்படம் வசூல் ரீதியாக கலெக்ஷனை அள்ளியது. இதில் கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை நிதி அகர்வால்.

ஜெயம் ரவிக்கு ஜோடியாக பூமியில்

ஜெயம் ரவிக்கு ஜோடியாக பூமியில்

ஈஸ்வரனுக்கு முன்பாகவே ஜெயம் ரவிக்கு ஜோடியாக பூமி படத்தில் நடித்திருந்தார் நிதி அகர்வால் . ரோமியோ ஜூலியட்,போகன் என இரண்டு வெற்றிகளை கொடுத்த லக்ஷ்மன்,ஜெயம் ரவி காம்போ மூன்றாவது முறையாக இணைந்த பூமி திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக நேரடியாக ஓடிடியில் வெளியானது.

ஹரி ஹர வீர மல்லு

ஹரி ஹர வீர மல்லு

தமிழில் நடித்த இரண்டு திரைப்படங்களும் ஒரே நேரத்தில் வெளியாகி இரண்டுமே ஹிட்டடித்தது. தமிழில் நடித்து வரும் அதே சமயம் தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் பல படங்களில் நிதி அகர்வால் நடித்து வருகிறார். அந்த வகையில் பவன் கல்யாண் நடிப்பில் சரித்திரப் படமாக உருவாகி வரும் ஹரி ஹர வீர மல்லு என்ற படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.

ஸ்டைலிஷ் தமிழச்சியே

ஸ்டைலிஷ் தமிழச்சியே

நடிகரும் இயக்குனருமான மகிழ்திருமேனி த்ரில்லர் படங்களுக்கு மிகவும் பெயர் போனவர். இப்பொழுது அடுத்ததாக பக்கா த்ரில்லர் கதையில் புதிய திரைப்படம் ஒன்றை இயக்கவுள்ளார். அதில் ஹீரோயினியாக நிதி அகர்வால் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். நடித்த இரண்டே படங்களில் தமிழ் சினிமாவில் தனக்கென பெரும் ரசிகர் கூட்டத்தை வைத்துள்ள நிதி அகர்வால் கவர்ச்சி காட்டுவதில் கொஞ்சமும் வஞ்சனை வைப்பதில்லை. மிக தாராளமாக திரைப்படங்களில் மட்டுமல்லாமல் சமூக வலைதளங்களிலும் கவர்ச்சி காட்டி வரும் இவர் இப்பொழுது பார்ட்டி மோடில் தொடையழகு தெரிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதனைப் பார்த்த ரசிகர்கள் ஸ்டைலிஷ் தமிழச்சி என பாராட்டி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X