ஓ..நெஞ்சே புஞ்சா மச்சி சுபா புஞ்சா, அச்சி அச்சி கேரக்டர்களில் நடிக்க நினைத்தும் ஒன்னும் தேறாததால், கொஞ்சம் டவுனாகவே இருந்தார்.மச்சியில் அறிமுகமானவர் சுபா புஞ்சா. அதே படம் மூலம் ஹீரோவானவர் சிவாஜியின் பேரன் துஷ்யந்த். இருவருக்குமே மச்சி கைகொடுக்கவில்லை. தனது நடிப்பின் மூலம் தாத்தாவின் பெயரைக் கெடுத்து விடக் கூடாது என்ற நல்லெண்ணத்தில் துஷ்யந்த்அப்படியே சைலன்ட் ஆகி விட்டார்.சுபாதான் அங்குமிங்குமாக அலைந்து, திரிந்து நல்ல வாய்ப்புகளைத் தேடி ஓடிக் கொண்டிருக்கிறார். திருடிய இதயத்தை படத்தில்கவர்ச்சியாயினியானார். அந்தப் படம் ஓடாவிட்டாலும் ஷெரீனின் மாஜி காதலர் ரோஹனோடு கொஞ்ச காலம் ஒட்டித் திரிந்தார்(இருவரும் பெங்களூர்காரர்கள் வேறு)இதையடுத்து மன்மதனில் சுபாவுக்கு சூப்பர் கேரக்டரைக் கொடுத்தார் சிம்பு. ஆனாலும் படு கிளாமரான அந்த ரோலால்,சுபாவுக்கு புதிதாக ஒன்றும் கிடைத்து விடவில்லை. திடீரென ஒரு ஆபரை அறிவித்தார். தனக்கு வாய்ப்பு கொடுத்தால் தனது தங்கை ஃப்ரீயாக நடித்துக் கொடுப்பார் என்ற சுபாவின்சூப்பர் ஆபருக்கும் பெரிய வரவேற்பு இல்லை. இதையடுத்து கன்னடத்துக்குப் போனவர் ஜாக்பாட் என்ற படத்தில் ஜெகஜாலகவர்ச்சி காட்டினார்.எப்படிக் கிளாமர் காட்டினாலும் தேறவே முடியலையே என்ற வருத்தத்தில் இருந்த சுபாவைக் கூப்பிட்டு ஷாலியின் அண்ணன்(அஜீத்தின் மச்சான்) ரிச்சர்ட் சண்முகா என்ற படத்தில் போட்டார். இதில் சுபாவுக்கும் பிருந்தா பாரீக்கும் இடையே ஒரு குத்துப்போட்டிப் பாட்டும் உள்ளது.அதில் ஓ.. போடு லெவலுக்கு ஆபாசமாக போஸ் கொடுத்த சுபாவின் படங்கள் கோலிவுட்டை உசுப்பி விட, ஓ ..நெஞ்சே என்றஒரு படத்திலும் இளமை என்ற படத்திலும் புக் செய்திருக்கிறார்கள். இதில் இளமை ரொம்ப மெதுவாக வளர்ந்து வருகிறது.இதிலும் சுபாவுக்கு அப்பப்பா கிளாமர் வேடம் தான்.ஓ நெஞ்சேவை இயக்கப் போவது ஷண்முகம். இவரது அப்பா அங்கமுத்து, அந்தக்கால எம்.ஜி.ஆர். படங்களுக்கு ஆர்ட்டைரக்டராக இருந்தவர். அப்பா பெயரில் தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்துள்ள ஷண்முகம் முதல் படத்தை இயக்கவுள்ளார். இதில் சுபாவுக்கு செமையான கிளாமர் வேடம். அவருக்கு ஜோடியாக வருபவர் வசீகரன். இவர் பாரதிராஜாவின் கண்களால் கைதுசெய் படம் மூலம் அறிமுகமானவர். கேமராவுக்கு முன்னால் வந்து எந்த ரியாக்ஷனும் காட்டாமல் தேமே என்று சும்மாநின்றிருந்தாரே.. அவரே தான்.அந்தப் படம் ரிலீசான பிறகு ப்ரியா மணியுடன் அப்படியே கொஞ்ச காலம் சென்னையை சுற்றிச் சுற்றி வந்தார். இருவரையும்சேர்த்து பல கிசுகிசுக்கள் வந்தன. ஆனால், முதல் படத்தோடு அப்படியே காணாமல் போனார்.இப்போது திரும்பி வந்துள்ள வசீகரன், சுபா புஞ்சாவுடன் ஜோடி போட்டு ஓ .. நெஞ்சே படத்தில் நடிக்கிறார். இது 100 சதவீதம்காதல், காதல், காதல் கதை தானாம். (தமிழ் சினிமாவுல இதை விட்டா என்ன கதை இருக்கு?)சுபா புஞ்சாவுக்கு, இந்த நெஞ்சு ஆறுதல் தருமா? என்று பொறுத்திருந்து பார்ப்போம். சுபாவே வேண்டிய அளவுக்கு கிளாமரைக் காட்டுவார் என்றாலும் பத்தாக்குறை ஏதும் வந்துவிடக் கூடாது என்பதற்காகமெல்லிசா, சானா கான், ப்ரீத்தி, பிரியா என குலுக்கல் பிகர்களையும் களமிறக்கிவிட்டுள்ளனர். இவர்களுக்கு என்ன வேலைதரப்படும் என்பது உங்களுக்குத் தெரிந்தது தானே..கொசு, ஸாரி.. கொசுறு:சுபா சினிமாவில் நுழைய உதவியது யார் தெரியுமோ? விந்தியாவின் மேனேஜர்-கம்-எல்லாமுமான அருண் தான்.கொசுறு 2:சுபா புஞ்சா 8 நாய்களையும் ஒரு பூனையையும் வளர்க்கிறார். (எப்படிப்பா இவ்வளவு முக்கியமான மேட்ரையெல்லாம் கலெக்ட்பண்றீங்க)

By Staff
மச்சி சுபா புஞ்சா, அச்சி அச்சி கேரக்டர்களில் நடிக்க நினைத்தும் ஒன்னும் தேறாததால், கொஞ்சம் டவுனாகவே இருந்தார்.

மச்சியில் அறிமுகமானவர் சுபா புஞ்சா. அதே படம் மூலம் ஹீரோவானவர் சிவாஜியின் பேரன் துஷ்யந்த். இருவருக்குமே மச்சி கைகொடுக்கவில்லை. தனது நடிப்பின் மூலம் தாத்தாவின் பெயரைக் கெடுத்து விடக் கூடாது என்ற நல்லெண்ணத்தில் துஷ்யந்த்அப்படியே சைலன்ட் ஆகி விட்டார்.

சுபாதான் அங்குமிங்குமாக அலைந்து, திரிந்து நல்ல வாய்ப்புகளைத் தேடி ஓடிக் கொண்டிருக்கிறார். திருடிய இதயத்தை படத்தில்கவர்ச்சியாயினியானார். அந்தப் படம் ஓடாவிட்டாலும் ஷெரீனின் மாஜி காதலர் ரோஹனோடு கொஞ்ச காலம் ஒட்டித் திரிந்தார்(இருவரும் பெங்களூர்காரர்கள் வேறு)

இதையடுத்து மன்மதனில் சுபாவுக்கு சூப்பர் கேரக்டரைக் கொடுத்தார் சிம்பு. ஆனாலும் படு கிளாமரான அந்த ரோலால்,சுபாவுக்கு புதிதாக ஒன்றும் கிடைத்து விடவில்லை.

திடீரென ஒரு ஆபரை அறிவித்தார். தனக்கு வாய்ப்பு கொடுத்தால் தனது தங்கை ஃப்ரீயாக நடித்துக் கொடுப்பார் என்ற சுபாவின்சூப்பர் ஆபருக்கும் பெரிய வரவேற்பு இல்லை. இதையடுத்து கன்னடத்துக்குப் போனவர் ஜாக்பாட் என்ற படத்தில் ஜெகஜாலகவர்ச்சி காட்டினார்.

எப்படிக் கிளாமர் காட்டினாலும் தேறவே முடியலையே என்ற வருத்தத்தில் இருந்த சுபாவைக் கூப்பிட்டு ஷாலியின் அண்ணன்(அஜீத்தின் மச்சான்) ரிச்சர்ட் சண்முகா என்ற படத்தில் போட்டார். இதில் சுபாவுக்கும் பிருந்தா பாரீக்கும் இடையே ஒரு குத்துப்போட்டிப் பாட்டும் உள்ளது.

அதில் ஓ.. போடு லெவலுக்கு ஆபாசமாக போஸ் கொடுத்த சுபாவின் படங்கள் கோலிவுட்டை உசுப்பி விட, ஓ ..நெஞ்சே என்றஒரு படத்திலும் இளமை என்ற படத்திலும் புக் செய்திருக்கிறார்கள். இதில் இளமை ரொம்ப மெதுவாக வளர்ந்து வருகிறது.இதிலும் சுபாவுக்கு அப்பப்பா கிளாமர் வேடம் தான்.

ஓ நெஞ்சேவை இயக்கப் போவது ஷண்முகம். இவரது அப்பா அங்கமுத்து, அந்தக்கால எம்.ஜி.ஆர். படங்களுக்கு ஆர்ட்டைரக்டராக இருந்தவர். அப்பா பெயரில் தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்துள்ள ஷண்முகம் முதல் படத்தை இயக்கவுள்ளார்.

இதில் சுபாவுக்கு செமையான கிளாமர் வேடம். அவருக்கு ஜோடியாக வருபவர் வசீகரன். இவர் பாரதிராஜாவின் கண்களால் கைதுசெய் படம் மூலம் அறிமுகமானவர். கேமராவுக்கு முன்னால் வந்து எந்த ரியாக்ஷனும் காட்டாமல் தேமே என்று சும்மாநின்றிருந்தாரே.. அவரே தான்.

அந்தப் படம் ரிலீசான பிறகு ப்ரியா மணியுடன் அப்படியே கொஞ்ச காலம் சென்னையை சுற்றிச் சுற்றி வந்தார். இருவரையும்சேர்த்து பல கிசுகிசுக்கள் வந்தன. ஆனால், முதல் படத்தோடு அப்படியே காணாமல் போனார்.

இப்போது திரும்பி வந்துள்ள வசீகரன், சுபா புஞ்சாவுடன் ஜோடி போட்டு ஓ .. நெஞ்சே படத்தில் நடிக்கிறார். இது 100 சதவீதம்காதல், காதல், காதல் கதை தானாம். (தமிழ் சினிமாவுல இதை விட்டா என்ன கதை இருக்கு?)

சுபா புஞ்சாவுக்கு, இந்த நெஞ்சு ஆறுதல் தருமா? என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

சுபாவே வேண்டிய அளவுக்கு கிளாமரைக் காட்டுவார் என்றாலும் பத்தாக்குறை ஏதும் வந்துவிடக் கூடாது என்பதற்காகமெல்லிசா, சானா கான், ப்ரீத்தி, பிரியா என குலுக்கல் பிகர்களையும் களமிறக்கிவிட்டுள்ளனர். இவர்களுக்கு என்ன வேலைதரப்படும் என்பது உங்களுக்குத் தெரிந்தது தானே..

கொசு, ஸாரி.. கொசுறு:

சுபா சினிமாவில் நுழைய உதவியது யார் தெரியுமோ? விந்தியாவின் மேனேஜர்-கம்-எல்லாமுமான அருண் தான்.

கொசுறு 2:

சுபா புஞ்சா 8 நாய்களையும் ஒரு பூனையையும் வளர்க்கிறார். (எப்படிப்பா இவ்வளவு முக்கியமான மேட்ரையெல்லாம் கலெக்ட்பண்றீங்க)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X