சுப்பிரமணியபுரம் ஸ்வாதிக்கு 30ம் தேதி திருமணம்: மாப்பிள்ளை ஒரு பைலட்

By Siva

Recommended Video

சுப்பிரமணியபுரம் ஸ்வாதிக்கு பைலட் மாப்பிளையுடன் திருமணம்...வீடியோ

ஹைதராபாத்: சுப்பிரமணியபுரம் புகழ் ஸ்வாதி பைலட்டை இந்த மாதம் திருமணம் செய்து கொள்ள உள்ளார்.

17 வயதில் டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினியானவர் ஸ்வாதி. சுப்பிரமணியபுரம் படம் மூலம் கோலிவுட் வந்தார். முதல் படத்திலேயே அவர் மிகவும் பிரபலமானார்.

தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் நடித்து வந்தார். தமிழில் அவரால் பெரிய அளவுக்கு வர முடியவில்லை.

 ஸ்வாதி

ஸ்வாதி

ஸ்வாதி மலேசியன் ஏர்லைன்ஸில் பைலட்டாக இருக்கும் விகாஸ் என்பவரை காதலித்து வந்தார். இந்நிலையில் வரும் 30ம் தேதி ஸ்வாதிக்கும், விகாஸுக்கும் திருமணம் நடக்கப் போகிறதாம். திருமணத்திற்கு குடும்பத்தார், நெருங்கிய நண்பர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து கேரள மாநிலம் கொச்சியில் பிரமாண்ட வரவேற்பு நடக்க உள்ளதாம்.

 இந்தோனேசியா

இந்தோனேசியா

விகாஸ் இந்தோனேசியாவில் உள்ள ஜகார்தாவில் வசிக்கிறார். திருமணத்திற்கு பிறகு ஸ்வாதி இந்தோனேசியாவில் செட்டில் ஆகிவிடுவார் என்று கூறப்படுகிறது. வரும் 30ம் தேதி திருமணம் நடக்க உள்ளதை ஸ்வாதி உறுதி செய்துள்ளார். திருமணத்திற்கு இன்னும் 15 நாட்களே இருப்பதால் பத்திரிகை கொடுப்பது உள்ளிட்ட வேலைகளில் பரபரப்பாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

 மகிழ்ச்சி

மகிழ்ச்சி

என் திருமணம் எளிமையாக நடக்க வேண்டும் என்று விரும்புகிறேன். என் திருமண செய்தியை நான் சினிமா துறையை சேர்ந்த சிலரிடம் மட்டுமே கூறியுள்ளேன். நான் பத்திரிகை கொடுக்கத் துவங்கியதும் என் திருமண செய்தி தீயாக பரவிவிட்டது. திருமணம் செய்து கொள்ளப் போவதில் மகிழ்ச்சியாக உள்ளது.

சினிமா

சினிமா

என் வருங்கால கணவர் பெயர் விகாஸ். அவர் கொச்சியை சேர்ந்தவர். பைலட்டாக உள்ளார். சினிமா துறையை சேராத எளிமையான ஆள். அதனால் தான் என் திருமணம் எளிமையாக நடக்க வேண்டும் என்று விரும்புகிறேன். இது காதல் பிளஸ் பெற்றோர்கள் ஏற்பாடு செய்துள்ள திருமணம். வாழ்க்கையில் திருமணம் நடக்கத் தான் செய்யும். அதற்காக வேலையை விட முடியாது. நான் நடிக்காமல் சும்மா இருந்தால் பைத்தியம் பிடித்துவிடும். அதனால் தொடர்ந்து சினிமா படங்களில் நடிப்பேன். நான் சினிமா துறைக்கு வந்து 16 ஆண்டுகள் ஆகிவிட்டது. தற்போது வாழ்க்கையில் கவனம் செலுத்த வேண்டிய நேரம் என்கிறார் ஸ்வாதி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X